இந்த உலகத்தில் உள்ள ஜீவ ராசிகள் அனைத்திற்கும் வெளிச்சம் தந்து வாழ வைப்பது சூரியன் தான். அவரே நவகிரங்கங்களுள் ஆண்மை கிரகமாகும். ஆண்மைக்குண்டான ஆற்றலை வழங்குபவர் இவரே. ஜாதக குறைபாடுகளால் சில தம்பதியருக்கு குழந்தை பேரு தள்ளிப்போகும். இதற்கு ஜாதக ரீதியில் பல காரணங்கள் உள்ளது.
ஆண் பெண் என குறை யாரிடம் இருந்தாலும் இறைவனிடம் இருவரும் வேண்டுவதே சரி. அந்த வகையில் ஆண்கள் சூரியனை வணங்குவதன் மூலம் சூரியனால் ஏற்படும் பிரச்சனைகள் விலகும், குழந்தைப்பேறு உண்டாகும். சூரியனை வழிபடும் சமயத்தில் கூறவேண்டிய அற்புதமான சூரியன் காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸ அஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்
பொது பொருள்: குதிரை கொடியை உடையவரும், தன் பாச கரங்களால் உலக மக்களை ரட்சிப்பவருமான சூரிய பகவானே உங்களை வணங்குகிறேன். எனக்கு நல்லாசி தந்து அருள்புரிய உங்கள் பாதம் பணிகிறேன்.
Please follow and like us:
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.