கூத்தனூர் சரஸ்வதி வீணை

 ‘கற்றது கையளவு கல்லாதது உலகளவு’ என்பதை எடுத்துக்கூறவே கலைமகளை இன்னும் வீணை வாசிக்கும் திருக்கோலத்திலேயே வழிபடுகிறோம். வீணை கலையின் அடையாளம். கலைகளின் நாயகியான கலைமகள் கரங்களில் வீணை இருப்பது மிகவும் பொருத்தம் தான். சரஸ்வதி ஏந்தி இருக்கும் அந்த வீணை ‘கச்சபி’ என்று அழைக்கப்படுகிறது. இசைப்பிரியரான சிவபெருமான் பிரம்ம தேவரின் வேண்டுதலுக்காக இந்த வீணையை பரிசாக அளித்தார்.
அந்த வீணையை கலைமகளுக்கு பிரம்ம தேவர் அளித்தார்.ஓங்காரத்தின் வடிவான இந்த வீணை பிரம்ம தேவரின் படைப்புக்கான ஆதார ஸ்ருதியை அளிக்க கூடியது. கல்விக்கு அதிதெய்வமாகவும், கலைகளின் தேவியாகவும் உள்ள இந்த தேவி வீணை வாசிப்பில் மகழ்ந்து அருள் புரியக்கூடியவள். ஆனால் வீணை இல்லாத சரஸ்வதியின் தோற்றம் அபூர்வம் எனலாம்.
கூத்தனூரில் குடியிருக்கும் சரஸ்வதி தன் கரங்களில் வீணையை ஏந்தியிருக்கிறாள். திருக்கண்டியூர், வேதாரண்யம், கங்கை கொண்ட சோழ புரம், திருக்கோடிக்கா போன்ற தலங்களில் வீணை இல்லாத சரஸ்வதியை ‘ஞான சரஸ்வதியாக’ தரிசிக்கலாம். படைப்பின் ஆதார ஸ்ருதியாக விளங்கும் சரஸ்வதியின் வீணை வணங்க வேண்டிய ஒன்று.

நவராத்திரிப் பண்டிகையின்போது அன்னை வாணியின் திருப்பாதங்களை அந்த ஒன்பது நாள் திருவிழாவின்போது தம் கைகளால் தொட்டு வணங்கிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். வெள்ளைத் தாமரை மலரின் மேல் சரஸ்வதி தேவி எழுந்தருளி இருப்பதோடு தனது மேல் வலது கரத்தில் ஜபமாலையையும் கீழ்புறமாய் உள்ள வலக்கையில் சின்முத்திரையும், மேல்புற இடது கையில் கெண்டியையும், கீழ்புற இடது கையில் சுவடியையும் தாங்கியவளாய் திருக்கோலம் கொண்டு அருள்பாலிக்கின்றாள்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com