சந்திர கிரகணம்: ஆகஸ்ட் 7 ஆம் தேதி திருப்பதியில் நடை அடைப்பு

ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு 10.52 மணி முதல் முதல் 12.48 மணி வரையிலான நேரத்தில் சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை, கிரகணத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாக மாலை 4.30 மணிக்கு கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு அடைக்கப்படவுள்ளது.
8ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படும்.

பின்னர் சுப்ரபாதம், தோல்மாலை, அர்ச்சனை மற்றும் ஆராதனைக்கு பிறகே, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com