மனிதனால் மட்டுமே முக்தி அடைய முடியும். அப்படிப்பட்ட மனித பிறவி எடுத்த நாம் முக்தி அடைய சிவ பெருமானை வழிபட மிக சிறப்பான நாள் தான் மகாசிவராத்திரி.
அன்றைய தினம் நாம் காலை முதல் இரவு முழுவதும் கண்விழித்து விரதம் இருந்து சிவபெருமானை வ அபிஷேக ஆராதனை செய்து வழிபட வேண்டும்.
மகா சிவராத்திரி 2021 தேதி மற்றும் நேரம் :
மகா சிவராத்திரி விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.
மகா சிவராத்திரி தேதி: மார்ச் 11, 2021 வியாழக்கிழமை
மகா சிவராத்திரி கடைப்பிடிக்க வேண்டிய
சதுர்த்தசி திதி தொடங்குகிறது: 2021 மார்ச் 11 அன்று பிற்பகல் 02:39
சதுர்த்தசி திதி முடிவடைகிறது -மார்ச் 12ம் தேதி பிற்பகல் 03:02 வரை.
முதல் ஜாமம் நேரம்
இரவு முதல் ஜாமம் பூஜை நேரம்: மாலை 06:27 முதல் 09:29 வரை
வழிபட வேண்டிய மூர்த்தம் – சோமாஸ்கந்தர்
அபிஷேகம் – பஞ்சகவ்வியம்
அலங்காரம் – வில்வம்
அர்ச்சனை மலர்கள் – தாமரை, அலரி
நிவேதனம் – பால் அன்னம்,சக்கரைப்பொங்கல்
பழம் – வில்வம்
பட்டு – செம்பட்டு
தோத்திரம் – இருக்கு வேதம் , சிவபுராணம்
மணம் – பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
வாசனைப் புகை போடுதல்- சாம்பிராணி, சந்தனக்கட்டை
தீப ஒளி- புட்பதீபம்
பாராயணம் – ரிக்வேதத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
இரண்டாவது ஜாமம்
இரவு இரண்டாவது ஜாமம் பூஜை நேரம்: 09:29 முதல் 12:31, மார்ச் 12
வழிபட வேண்டிய மூர்த்தம் – தென்முகக் கடவுள்
அபிஷேகம் – பஞ்சாமிர்தம்
அலங்காரம் – குருந்தை
அர்ச்சனை மலர்கள் – துளசி
நிவேதனம் – பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் – பலா
பட்டு – மஞ்சள் பட்டு
தோத்திரம் – யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
மணம் – அகில், சந்தனம்
வாசனைப் புகை போடுதல்- சாம்பிராணி, குங்குமம்
தீப ஒளி- நட்சத்திரதீபம்
பாராயணம் – யஜூர்வேத பாராயணம் செய்யவும்
மூன்றாம் ஜாமம்
இரவு மூன்றாம் ஜாமம் பூஜை நேரம்: மார்ச் 12ம் தேதி 12:31 AM முதல் 03:32 AM
வழிபட வேண்டிய மூர்த்தம் – இலிங்கோற்பவர்
அபிஷேகம் – தேன், பாலோதகம்
அலங்காரம் – கிளுவை, விளா
அர்ச்சனை மலர்கள் – மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
நிவேதனம் – எள் அன்னம்
பழம் – மாதுளம்
பட்டு – வெண் பட்டு
தோத்திரம் – சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் – கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
வாசனைப் புகை போடுதல்- மேகம், கருங் குங்கிலியம்
தீப ஒளி- ஐதுமுக தீபம்
பாராயணம் – சாமவேத பாராயணம் செய்யவும்
நான்காம் ஜாமம்
இரவு நான்காவது ஜாமம் பூஜை நேரம்: மார்ச் 12ம் தேதி 03:32 AM முதல் 06:34 AM
வழிபட வேண்டிய மூர்த்தம் – சந்திரசேகரர்(இடபரூபர்)
அபிஷேகம் – கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் – கரு நொச்சி
அர்ச்சனை மலர்கள் – நந்தியாவட்டை
நிவேதனம் – வெண்சாதம்
பழம் – நானாவித பழங்கள்
பட்டு – நீலப் பட்டு
தோத்திரம் – அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
மணம் – புணுகு சேர்ந்த சந்தணம்
வாசனைப் புகை போடுதல்- கர்ப்பூரம், இலவங்கம்
தீப ஒளி- மூன்று முக தீபம்
பாராயணம் – அதர்வண வேதம் பாராயணம் செய்யலாம்.
சிவராத்திரி பரண நேரம்: மார்ச் 12ம் தேதி அதிகாலை 06:34 AM முதல் பிற்பகல் 03:02 PM வரை
மகா சிவராத்திரி தினமானது மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மாலை முதல் மறுநாள் காலை வரை தொடர்ந்து ஒவ்வொரு ஜாமத்தில் சிவ பெருமானுக்கு பழங்கள், வில்வ இலை, இனிப்புகள் மற்றும் பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, ருத்ராட்சம் உள்ளிட்ட பொருட்களால் சிவ பெருமானுக்கு அபிஷேகம் நடத்தப்படும். ஒவ்வொரு ஜாமம் பூஜை முடிந்ததும் அலங்காரம் செய்யப்படும். பின்னர் மீண்டும் அடுத்த ஜாம அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்படும்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.