சிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்

அனைவருமே அறிவோம் சிவபெருமான் இந்து மதத்தின் மிகமுக்கிய கடவுள் என்று. மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமான் அழித்தல் வேலையை செய்பவர். அவரது வேலைக்கு ஏற்ப மிகவும் கோபக்கார கடவுளாகவே சிவபெருமான் பலராலும் அறியப்படுகிறார். ஆனால் உண்மையில் சிவபெருமான் தீயவர்களுக்கு மட்டுமே ருத்ரமூர்த்தி அவருடைய பக்தர்களுக்கு சாந்தமூர்த்திதான்.

things-offer-lord-shiva

சிவபெருமானுக்கு சில பொருட்களை வைத்து வழிபட்டால் பிடிக்காது உதாரணத்திற்கு மஞ்சள், குங்குமம், கேதகை மலர் போன்றவை. ஆனால் சில பொருட்கள் அவரின் அருளை பூரணமாக பெற்றுத்தரும். எனவே சிவருமானை வழிபடும்போது அதுபோன்ற பொருட்களை வைத்தே வழிபடுங்கள். இங்கே உங்களுக்கு சிவபெருமானின் அன்பை பெற்றுத்தரும் பொருட்கள் எவை என்பதை பார்க்கலாம்.

சிவமந்திரம்

சிவபுராணத்தில் சிவபெருமானுக்கு அவரின் துதிபாடும் மந்திரங்கள் பிடிக்குமென கூறப்பட்டுள்ளது. அதன்படி ஒரு வெண்கல பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்துக்கொண்டு சிவமந்திரங்களை கூறிக்கொண்டே சிவனுக்கு அபிஷேகம் செய்வது அவருடைய உக்கிரத்தை அணைப்பதோடு நம் வாழ்விலும் அமைதியை கொண்டுவரும்.

குங்குமப்பூ

குங்குமப்பூ

குங்கமப்பூ என்பது மக்களால் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தபட்டு வருகிறது. ஆனால் அது சிவனுக்கு மிகவும் பிடித்த பொருள் என்பது பலரும் அறியாத ஒன்று.

குங்குமப்பூவை கொண்டு சிவனை வழிபடுவது உங்கள் வாழ்வில் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும்.

 

 

சர்க்கரை

சர்க்கரை

 

சர்க்கரை உங்களுக்கு வேண்டுமானால் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தலாம். ஆனால் ஈசனுக்கோ சர்க்கரை என்றால் கொள்ளைப்பிரியம்.

சிவபெருமானுக்கு ருத்ர அபிஷேகம் நடக்கும்போதோ அல்லது சிவராத்திரி பூஜையின் போதோ சர்க்கரையை வைத்து வழிபட்டால் உங்கள் வாழ்க்கையில் உள்ள வறுமை பனி போல விலகுவது நிச்சயம்.

 

 

பன்னீர்

பன்னீர்

 

சிவபுராணத்தின் படி ஈசனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்வதோ அல்லது வைத்து வழிபடுவதோ சிவபெருமானை குளிர்விக்கும் அதோடு தூய்மையையும் பரப்பும்.

மேலும் இவ்வாறு வழிபடுவது பக்தர்களுக்கு அவர்கள் வாழ்க்கையின் இலட்சியத்தில் கவனம் செலுத்த உதவுவதோடு அதனை அடையவும் அருள்புரியும்.

 

பசும் பால்

தயிர்

 

பசும் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆயுள் விருத்தியும்  கிடைக்கும். தோஷங்கள் நீங்கும்.

 

 

தயிர்

பசுநெய்

 

தயிர் என்பது அனைத்து கடவுளுக்கும் படைக்கப்படும் ஒரு முக்கிய பொருளாகும்.

சிவபெருமானுக்கு தயிர் வைத்து வழிபடுவதில் கூடுதல் சிறப்பு என்னவெனில் இது உங்களுக்கு வாழ்வில் அமைதியையும், வாழ்வில் பொறுப்பையும் வழங்கும் அதுமட்டுமின்றி துரதிர்ஷ்டத்தை உங்கள் வாழ்க்கையை விட்டு துரத்தும்.

 

பசுநெய்

பசுநெய்

சிவபெருமானை நெய்யை வைத்து வழிபடும்போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனெனில் சிவனுக்கு சுத்தமான பசும்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய்யை வைத்து மட்டுமே வழிபடவேண்டும்.

உங்களுக்கு ஈசனின் அருளால் வாழ்வில் வெற்றியும், வலிமையும் வேண்டுமெனில் இதனை செய்யுங்கள்.

 

 

தேன்

இயற்கையின் மிகவும் தூய்மையான படைப்புகளில் ஒன்று தேன். எனவே இது சிவபெருமானுக்கு படைக்க ஏற்ற ஒன்றாகும்.

தேனை வைத்து வழிபடுவது ஒருவரின் குணத்தை நல்லதாக மாற்றுவதோடு அவர்கள் வாழ்வில் இனிமையையும் சேர்க்கும்.

 

 

 

திருநீறு

Image result for VIBUTHI

 

இந்த உடல் நிலையற்றது ஆனால் ஆன்மாவிற்கு முடிவு என்பதே இல்லை.

முடியாண்ட மன்னரும்,முடிவில் பிடி சாம்பல் ஆவர் என்ற தத்துவத்தை நினைவூட்டவே திருநீறு அபிஷேகம்.

 

 

 

பஞ்சாமிருதம்

Related image

 

பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும்.

அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம்.

 

வில்வ இலை

Image result for வில்வ இலை

 

இது சிவவழிபாட்டிற்காகவே படைக்கப்பட்ட ஒன்றாகும். ஏனெனில் மலர்களை காட்டிலும் இந்த இலைகளே ஈசனுக்கு மிகவும் பிடித்தது.

இதனை வைத்து வழிபடுவது உங்கள் வாழ்வில் உள்ள எதிர்மறை மற்றும் தீய சக்திகளை விரட்டுவதோடு உங்கள் துன்பங்களுக்கு ஒரு முடிவை கொண்டுவரும்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com