சென்னையில்  திரிசூலநாதர்

கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் திரிசூலநாதர் சென்னையில்  சர்..சர்.. என விமானங்கள் வந்து இறங்குகின்ற மீனம்பாக்கத்தில் அருகில் இறைவனின் பெயராலேயே இந்த ஊர் இன்றளவும் அறியப்படுகின்ற
இறைவனின் பெயராலேயே இந்த ஊர் இன்றளவும் அறியப்படுகின்ற .  திரிசூலம் தலம் பற்றி இன்று 23/4/2019 செவ்வாய்க்கிழமை அன்று பதிவு செய்துள்ளோம்.
சிவாயநம திருச்சிற்றம்பலம்

சென்னை மீனம்பாக்கத்தில் சர்..சர்.. என விமானங்கள் வந்து இறங்குகின்றன, மேலேறி பறக்கின்றன, பரபரப்பாக இயங்கும் நெடுஞ்சாலையை கடப்பவர்கள் இங்கு இப்படி ஒரு ஆன்மீக தலம் இருப்பதை அறிவார்களா என்று தெரியவில்லை. இறைவனின் பெயராலேயே இந்த ஊர் இன்றளவும் அறியப்படுகின்ற .
திரிசூலம் தலம் பிரம்மன் வழிபட்ட தலமாக இங்கு திரிசூலநாதர் எழுந்தருளியிருக்கிறார். நான்கு மலைகள் சூழ நடுவில் அமைந்துள்ளது திரிசூல நாதர் திருக்கோயில். தனது படைப்புத்தொழில் இடையூறின்றி நடக்க வேண்டி பிரம்மதேவர் ஒரு குளத்தை வெட்டி அங்கு சிவலிங்கம் அமைத்து வழிபடுகிறார். பிரம்மன் உருவாக்கிய பாணதீர்த்தம் கொண்ட இந்த சிவலிங்கமே திரிசூலநாதர் திருக்கோயில். கஜப்ருஷ்ட விமானத்துடன் அமைந்த
சுவாமி அருகில் சொர்ணாம்பிகை  கருவறையில் இருக்க மற்றொரு பிரதான அம்பாள் திரிபுரசுந்தரி தனி சந்நிதியில் அருள் பாலிக்கின்றார்

Image result for சென்னையில்  திரிசூலநாதர்நான்கு வேதங்களே நான்கு மலைகளாக, வேதங்களின் உட்பொருளான இறைவன் அவற்றின் நடுவில் வீற்றிருக்கும் இடமே திரிசூல நாதர் திருக்கோயில்.  பிரம்மதேவர் அமைத்ததாக கூறப்படும் தீர்த்தம் கோயிலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரே இறைவனின் பூஜை, வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது.

விமான நிலையத்திற்கு எதிரில், ரயில்வே கேட்டை கடந்து வந்தால், ஒருகிலோமீட்டர் தொலைவில் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நந்தியெம்பெருமானை வழிபட்டு, நல்ல தரிசனத்திற்கு அனுமதிகேட்டு உள்ளே நுழைவோம். நுழைந்ததும் திரிசூலநாதரை தரிசிக்கலாம். திரிபுரசுந்தரி உடனுறை திரிசூலநாதராக இருந்தாலும், அவருக்கு அருகே சௌந்தராம்பிகை இருக்கிறார். நேர்பார்வையில் சௌந்தராம்பிகையை தரிசிக்க முடியாது, காரணம் திரிசூலநாதரின் அருகே இடப்புறத்தில் அவரை பார்த்தபடி நின்றபடி இருக்கிறார் சௌந்தராம்பிகை. இப்படி இருப்பதற்கு பின்னே ஒரு வரலாறு இருக்கிறது.

அந்நியர் படையெடுப்பின்போது கோயிலில் இருந்த சௌந்தராம்பிகை தாயாரின் கையில் கட்டைவிரல் சேதமடைந்துவிடுகிறது. அதனால் பின்னப்பட்ட சிலையை வழிபடக்கூடாது என்று கூறி, தனியே வைத்துவிடுகிறார்கள்.அப்போது அர்ச்சகரின் கனவில் வந்து தனது பின்னத்தை சரிசெய்து, மீண்டும் திரிசூலநாதரின் அருகே வைக்குமாறு தாய் அருள் கூற, அதன்படி சிலையின் பின்னப்பட்ட விரலுக்கு பதிலாக தங்கத்தில் விரல் செய்து பின்னர் திரிசூலநாதரின் அருகிலேயே அன்னையை இருக்கச்செய்திருக்கிறார்கள். அன்னையும், தந்தையுமாக உயிர்ப்புடன் அருள் தரும் தலம் இது.

அன்னையை தரிசிக்க வேண்டும் என்றால், ஆண்கள் மேல்சட்டையின்றி கருவறைக்கு முன் உள்ள அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்தால், அன்னையின் தரிசனத்தை பெறலாம். காலம் காலமாக அருள் சுரக்கும் அன்பு முகத்துடன் காட்சிதரும் அன்னை, உண்மையிலேயே சௌந்தரம் ததும்பும் பேரழகி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  இந்தக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 -1120) காலத்தில் கட்டப்பட்டது. முதலில் வானவன் சதுர்வேதிமங்களம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது. முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில் திருநீற்றுசோழநல்லூர் என்றும் பின்னர் இறைவனின் பெயரால் திரிசூலம் என்றும் அழைக்கப்படுகிறது.
பல்லவபரமன வானவன் மாதேவிச் சதுர்வேதிமங்களம், திருநீற்றுசோழநல்லூர், திருச்சுரம், சுரத்தூர், பிரம்மபுரி, திரிசூலம் என்ற பெயர்களில் இந்த ஊர் வழங்கப்படுகிறது.

இக்கோயிலில் ஆதிசங்கரர், ஐயப்பன், ஆஞ்சநேயருக்கு தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன. கோயிலின் பழைமையை இங்கு நுழைந்ததுமே உணர முடியும். யக்ஷர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்பட்டாலும், அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.  பிரம்மனுக்கே அருள்பாலித்த இடம் என்பதால் திரிபுரசுந்தரி உடனுறை திரிசூலநாதரை வழிபட்டால் நமக்கு வரும் கெட்ட நேரங்களும் நல்லநேரங்களாக மாறும்..
சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல் களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் “நமஹ” என்றும் தமிழில் “போற்றி” என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து இந்த சிவநாமாவளி பாடப்படும்.
Image result for சென்னையில்  திரிசூலநாதர்
01. ஓம் சிவாய நமஹ
02. ஓம் மஹேச்வராய நமஹ
03. ஓம் சம்பவே நமஹ
04. ஓம் பினாகிநே நமஹ
05. ஓம் சசிசேகராய நமஹ

06. ஓம் வாம தேவாய நமஹ
07. ஓம் விரூபாக்ஷாய நமஹ
08. ஓம் கபர்தினே நமஹ
09. ஓம் நீலலோஹிதாய நமஹ
10. ஓம் சங்கராய நமஹ

11. ஓம் சூலபாணயே நமஹ
12. ஓம் கட்வாங்கிநே நமஹ
13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ
14. ஓம் சிபி விஷ்டாய நமஹ
15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ
17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ
18. ஓம் பவாய நமஹ
19. ஓம் சர்வாய நமஹ
20. ஓம் திரிலோகேசாய நமஹ

21. ஓம் சிதிகண்டாய நமஹ
22. ஓம் சிவாப்ரியாய நமஹ
23. ஓம் உக்ராய நமஹ
24. ஓம் கபாலிநே நமஹ
25. ஓம் காமாரயே நமஹ

26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ
27. ஓம் கங்காதராய நமஹ
28. ஓம் லலாடாக்ஷõய நமஹ
29. ஓம் காலகாளாய நமஹ
30. ஓம் க்ருபாநிதயே நமஹ

31. ஓம் பீமாய நமஹ
32. ஓம் பரசுஹஸ்தாய நமஹ
33. ஓம் ம்ருகபாணயே நமஹ
34. ஓம் ஜடாதராய நமஹ
35. ஓம் கைலாஸவாஸிநே நமஹ

36. ஓம் கவசிநே நமஹ
37. ஓம் கடோராய நமஹ
38. ஓம் திரிபுராந்தகாய நமஹ
39. ஓம் வ்ருஷாங்காய நமஹ
40. ஓம் வ்ருஷபாரூடாய நமஹ

41. ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நமஹ
42. ஓம் ஸாமப்ரியாய நமஹ
43. ஓம் ஸ்வரமயாய நமஹ
44. ஓம் த்ரயீமூர்த்தயே நமஹ
45. ஓம் அநீச்வராய நமஹ

46. ஓம் ஸர்வஜ்ஞாய நமஹ
47. ஓம் பரமாத்மநே நமஹ
48. ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய நமஹ
49. ஓம் ஹவிஷே நமஹ
50. ஓம் யக்ஞ மயாய நமஹ

51. ஓம் ஸோமாய நமஹ
52. ஓம் பஞ்வக்த்ராய நமஹ
53. ஓம் ஸதாசிவாய நமஹ
54. ஓம் விச்வேச்வராய நமஹ
55. ஓம் வீரபத்ராய நமஹ

56. ஓம் கணநாதாய நமஹ
57. ஓம் ப்ரஜாபதயே நமஹ
58. ஓம் ஹிரண்ய ரேதஸே நமஹ
59. ஓம் துர்தர்ஷாய நமஹ
60. ஓம் கிரீசாய நமஹ

61. ஓம் கிரிசாய நமஹ
62. ஓம் அநகாய நமஹ
63. ஓம் புஜங்கபூஷணாய நமஹ
64. ஓம் பர்க்காய நமஹ
65. ஓம் கிரிதன்வநே நமஹ

66. ஓம் கிரிப்ரியாய நமஹ
67. ஓம் க்ருத்தி வாஸஸே நமஹ
68. ஓம் புராராதயே நமஹ
69. ஓம் மகவதே நமஹ
70. ஓம் ப்ரமதாதிபாய நமஹ

71. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமஹ
72. ஓம் ஸூக்ஷ்மதனவே நமஹ
73. ஓம் ஜகத்வ் யாபினே நமஹ
74. ஓம் ஜகத் குரவே நமஹ
75. ஓம் வ்யோமகேசாய நமஹ

76. ஓம் மஹா ஸேந ஜநகயா நமஹ
77. ஓம் சாருவிக்ரமாய நமஹ
78. ஓம் ருத்ராய நமஹ
79. ஓம் பூதபூதயே நமஹ
80. ஓம் ஸ்தாணவே நமஹ

81. ஓம் அஹிர் புதன்யாய நமஹ
82. ஓம் திகம்பராய நமஹ
83. ஓம் அஷ்டமூர்த்தயே நமஹ
84. ஓம் அநேகாத்மநே நமஹ
85. ஓம் ஸாத்விகாய நமஹ

86. ஓம் சுத்த விக்ரஹாய நமஹ
87. ஓம் சாச்வதாய நமஹ
88. ஓம் கண்டபரசவே நமஹ
89. ஓம் அஜாய நமஹ
90. ஓம் பாசவிமோசகாய நமஹ

91. ஓம் ம்ருடாய நமஹ
92. ஓம் பசுபதயே நமஹ
93. ஓம் தேவாய நமஹ
94. ஓம் மஹாதேவாய நமஹ
95. ஓம் அவ்யயாயே நமஹ

96. ஓம் ஹரயே நமஹ
97. ஓம் பூஷதந்தபிதே நமஹ
98. ஓம் அவ்யக்ராய நமஹ
99. ஓம் பகதேத்ரபிதே நமஹ
100. ஓம் தக்ஷாத்வரஹராய நமஹ

101. ஓம் ஹராய நமஹ
102. ஓம் அவ்யக்தாய நமஹ
103. ஓம் ஹஸஸ்ராக்ஷாய நமஹ
104. ஓம் ஸஹஸ்ரபதே நமஹ
105. ஓம் அபவர்க்கப்ரதாய நமஹ

106. ஓம் அனந்தாய நமஹ
107. ஓம் தாரகாய நமஹ
108. ஓம் பரமேச்வராய நமஹ
சிவாயநம.

நமச்சிவாயம் வாழ்க, நாதன் தாள் வாழ்க..
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.
சிவாயநம திருச்சிற்றம்பலம்

 

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com