ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பொதுவாக சக்தி தலங்களில்தான் பக்தைகள் கூட்டம் நிரம்பி வழியும். பொங்கல் வைப்பதும், நாகர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதும், புற்றுக்கு முட்டை, பால் ஊற்றுவதும் கோலாகலமாக இருக்கும். ஆனால் சிவத்தலமான இங்கு செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் கூட்டம் சக்தி தலங்களில் திரளும் கூட்டத்தையும் மிஞ்சுவதாக உள்ளது. அந்த வகையிலும் இந்த அகத்தீஸ்வரர் ஆலயம் செவ்வாய்க்கிழமை கோவில் என்ற புகழை பெற்றுள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு இந்த தலத்தில் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு பக்தைகள் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இங்குள்ள தீர்த்தம் அங்காரக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் நீராடி விரதம் இருப்போர் புத்திரதோஷம் நீங்கப் பெறுவர். செவ்வாய் தோஷம் நீங்கித் திருமணம் நடைபெறும். திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடி விரதமிருந்து வழிபட்டால் தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையைப் பெறுவது உறுதி. அமாவாசையில் நீராடுவோர் சத்துரு பயமின்றி வாழ்வர். பவுர்ணமியில் நீராடுவோர் சகல சம்பத்துக்களும் பெற்றுச் சகல யோகம் மிக்க பெருவாழ்வு வாழ்வர்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.