Tweet அ-அ+
சிவனே நவக்கிரக நாயகனாக வீற்றிருப்பதால் நவக்கிரகங்களுக்கு பதில் நவலிங்கங்கள் உள்ளன. தோஷ பரிகாரங்கள் இந்த லிங்கத்திற்குதான் செய்யப்படுகிறது.
தஞ்சை பெரிய கோவில்தஞ்சை பெரிய கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை. சிவனே நவக்கிரக நாயகனாக வீற்றிருப்பதால் நவக்கிரகங்களுக்கு பதில் நவலிங்கங்கள் உள்ளன. தோஷ பரிகாரங்கள் இந்த லிங்கத்திற்குதான் செய்யப்படுகிறது. கோபுரம் பிரமீடு அமைப்பில் இருப்பதாலும், ராஜராஜன் விரும்பி கட்டிய கோவில் என்பதாலும் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
* ராஜராஜ சோழன் செய்த செப்பு சிலைகளில் நடராஜர் சிலை மிகவும் அற்புதமானது. அதை ஆடவல்லான் என்று ராஜராஜன் அழைத்தார்.
மேலும் இதை சிறப்பிக்கும் வகையில் சோழப்பேரரசு வெளியிட்ட நாணயத்துக்கு ஆடவல்லான் என்று பெயர் சூட்டி இருந்தார்.
* தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954-ம் ஆண்டு 1,000 ரூபாய் நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் கோவிலின் வியத்தகு தோற்றம் பதி்க்கப்பட்டது.
* ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றும் சற்றுகூட பழமை மாறாமல் கலைகளின் பொக்கிஷமாக ெபரிய கோவில் திகழ்கிறது.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.