திருஆப்பாடி (திருவாய்ப்பாடி)

இறைவர் திருப்பெயர்: பாலுகந்தநாதர், பாலுகந்தீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: பிருகந்நாயகி, பெரியநாயகி.
தல மரம்: அத்தி.
தீர்த்தம் :
வழிபட்டோர்: சண்டேசுவரர், அப்பர் – கடலகம் ஏழி னோடும்.

தல வரலாறு

 

      • மக்கள் வழக்கில் ‘திருவாய்ப்பாடி’ என்று வழங்குகிறது. 
      • சண்டேசுவரர் வழிபட்டு முத்திப் பெற்றத் தலம்.

 

தேவாரப் பாடல்கள்	: அப்பர் - கடலகம் ஏழி னோடும்.

சிறப்புகள்

 

      • 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட மிகவும் பழமையானத் திருக்கோயில் 
      • மூலவர் – சிவலிங்கத் திருமேனி; சுயம்பு. 
      • மூலஸ்தானத்தின் அருகிலேயே சண்டிகேஸ்வரர் அருள்பாலிப்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பு. 
      • கொடிமரமில்லை. 
      • முன் மண்டபம் வெளவால் நெத்தியமைப்புடையது. 
      • கல்வெட்டில் இறைவன் பெயர் ‘ஆப்பாடி உடையார் ‘ என்றுள்ளது.

அமைவிடம் அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்ப்பாடி – 612 504. திருப்பனந்தாள் அஞ்சல், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். திருக்கோயில் அர்ச்சகர் (பாலுக்குகந்தநாதன்) தொடர்பு எண். +91-9442167104. இந்தியா – மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் – திருப்பனந்தாள் சாலையில், சேங்கனூர் (சேய்ஞலூர்) சாலையைத் தாண்டி, திருவாய்ப்பாடி உள்ளது.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com