அகத்திய முனிவர், ஈசனை தேனீ வடிவில் சென்று வழிபட்ட தலமே திருஈங்கோய்மலை. திருஈங்கோய் மலையின் பாறை மீது அமைந்துள்ள ஸ்ரீலலிதா மஹிளாமந்திர், சக்தி பீடதலமாகத் திகழ்கிறது. முழுக்க முழுக்க ஸ்ரீவித்யா தீட்சை பெற்று துறவிகளாகவுள்ள யோகினியர்களும், தியாகினிகளும் பூஜைகளை செய்கின்றனர்.
கன்னிப் பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. லலிதாம்பிகை வெள்ளைப் பளிங்கினாலான திருமேனியளாய்த் திகழ்கிறாள். அம்பிகையின் இடது கை கரும்பினை ஏந்த, வலது கையில் ஐந்து வகை பூக்களால் ஆன புஷ்பபாணம் இருக்கிறது.
இடது கீழ் கையில் பாசமும், வலது கீழ் கையில் அங்குசமும் இருக்கின்றன. அம்பிகை எழுந்தருளியுள்ள பீடம் மேருபீடம் என போற்றப்படுகிறது. சக்தி பீடங்களில் இத்தலம் சாயாபீடம் எனப் போற்றப்படுகிறது.
ஈசனின் மனைவியான தாட்சாயணி தேவியின் முக சாயை இந்த மலையில் விழுந்ததால் இதற்கு சாயாபுரம் என்றும் பெயர் உண்டு. திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டத்தில் உள்ள மணமேடு எனும் இடத்தில் இத்தலம் உள்ளது.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.