திருச்சானூர் பத்மாவதி தாயார்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். அதில் வாரத்தில் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் தினமும் அதிகாலை 4.30 மணியளவில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்யலாம். மேற்கண்ட நாட்களில் 100 பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் அதிகாலை 3.30 மணியளவில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று 150 பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சண அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.
இந்த நடைமுறை இன்று (திங்கட்கிழமை) முதல், அமலுக்கு வருகிறது என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Please follow and like us:
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.