திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் பத்மாவதி கோவிலில் அன்னதான கூடம் இன்று திறக்கப்பட்டது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்னதான கூடம் உள்ளது. இங்கு தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
விழா காலங்களிலும், பக்தர்கள் அதிகம் வரும் நேரங்களிலும் அன்னதான கூடத்தில் கடும் கூட்டம் ஏற்படுகிறது. இதையடுத்து, 2-வது வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் அருகே புதிய அன்னதான கூடம் கட்டப்பட்டது. பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்த அன்னதான கூடத்தில் 1½ லட்சம் பக்தர்கள் உட்க்ராந்து சாப்பிடலாம்.
கடந்த பிரமோற்சவம் திருவிழாவின் போது இந்த புதிய அன்னதான கூடம் செயல்பட தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோவிலில் சுமார் 6.75 கொடி ரூபாய் மதிப்பில் புதிய அன்னதான கூடம் இன்று திறக்கப்பட்டது. இந்த அன்னதான கூடத்தை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுதாகர் திறந்து வைத்தார். இதன்மூலம் பக்தர்கள் சிரமமின்றி அன்னதானத்தை சாப்பிடலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.