திருப்பதி திருமலையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலுள்ளது திருச்சானூர். அலமேல்மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் இந்தத் தலத்தில் பத்மாவதி தாயாரின் கோயில் உள்ளது.திருமலையில் தரிசிப்பவர்கள் திருச்சானூருக்கும் சென்று பத்மாவதி தாயாரை சேவித்துவிட்டு வருவார்கள். இதனால் திருமலையைப் போலவே இங்கும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
திருப்பதியில் வெங்கடேசப் பெருமாளுக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறுவது போலவே, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டு வருடாந்தர பிரம்மோற்சவம் டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவிருக்கிறது. அன்று கோயில் மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்குத் திருமஞ்சனம் நடைபெறும். இரவில் ஊஞ்சல் சேவையும் தொடர்ந்து பத்மாவதி தாயார் தங்க, வைர நகைகளில்அலங்கரிக்கப்பட்டு சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலாவருவார்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.