திருச்செந்தூர் கோவிலில் தரிசனக் கட்டணம் திடீர் உயர்வு! பக்தர்கள் அதிர்ச்சி

திருச்செந்தூர் சுப்ரமணிய கோவிலில் தரிசனக் கட்டணம் எவ்வித முன்னறிவிப்புமின்றி உயர்த்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர் சுப்ரமணிய கோவில். கடல் பகுதிக்கு அருகில் கடல் மட்டத்தை விட தாழ்வாக இருக்கும் ஒரே கோவில் என்ற பெருமை திருச்செந்தூருக்கு உண்டு. கடல் அருகே இருந்தும் நூற்றாண்டுகளை தாண்டியும், உப்பு அரிப்பால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இதன் கோபுரங்கள் கம்பீரமாக காட்சியளிப்பது கூடுதல் சிறப்பு.

இந்த கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் மற்றும் விஐபி.,க்களின் வசதிக்காக கட்டண அடிப்படையில் தரிசனங்களும் நடைபெறுகிறது.

இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திருச்செந்தூர் கோவிலின் தரிசனக் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இங்கு தினமும் 9 கால பூஜைகள் நடந்து வருகிறது.

இந்த பூஜை நேரங்களில் நடைபெறும் அபிஷேக தரிசன கட்டணமாக இதுவரையில், பொதுமக்களுக்கு 200 ரூபாயும், விஐபி.,க்களுக்கு 1,000 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த கட்டணம் தற்போது இரு மடங்காக உயர்த்தப்பட்டு, பொதுக்களுக்கு 500 ரூபாயும், விஐபி.,க்களுக்கு 2,500 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளதுஇது குறித்து எந்த அறிவிப்பு பலகையும் கோவில் வளாகத்தில் வைக்கப்படவில்லை என்றும், தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்கும் போது தான் கட்டண உயர்வை ஊழியர்கள் கூறுகிறார்கள் என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com