திருச்சோற்றுத்துறை

இறைவர் திருப்பெயர்: ஓதனவனேஸ்வரர், தொலையாச் செல்வர், சோற்றுத்துறை நாதர்.
இறைவியார் திருப்பெயர்: அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை.
தல மரம்: பன்னீர் மரம்
தீர்த்தம் : காவிரி
வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர் ,சுந்தரர்,இந்திரன், சூரியன், கௌதமர் ஆகியோர்.

தல வரலாறு

வழிபடும் அடியவர்களின் பசிப் பிணி தீர, இறைவன் உணவு வழங்குபவன்; ஆதலின் இத்தலம் சோற்றுத்துறை எனப்பட்டது. (பிறவிப்பிணி தீர இறைவன் வீடு பேறு வழங்குபவன் என்பது பொருள்.)

அடியார்கள் பசிப்பிணியால் வருந்தியபோது இறைவன் அக்ஷய பாத்திரம் வழங்கி அனைவரின் பசியையும் போக்கியதால் இறைவன் இறைவிக்குத் தொலையாச் செல்வர், அன்னபூரணி என்ற திருப்பெயர்கள் வழங்கலாயிற்று.

வாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் – செப்ப நெஞ்சே.

2. அப்பர் – 1. பொய்விரா மேனி,
2. காலை யெழுந்து,
3. கொல்லை யேற்றினர்,
4. மூத்தவனாய் உலகுக்கு

3. சுந்தரர் – அழல்நீர் ஒழுகி.

தல மரம் : பன்னீர் மரம்


சிறப்புகள்

இது சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று.

ஊர்ப்பெயருக்கேற்ப சப்தஸ்தான விழாவில் ஏழூர்வலம் வரும் அடியார்களுக்கு இங்கு அன்னம் பாலிப்பு நடைபெறுகிறது.

தலப் பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.

இத்தலத்திற்குச் மேலும் சிறப்பு சேர்க்கும் மூர்த்தியாக அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது.

தனிக்கோயிலில் அம்பாள் திருமணக்கோலமாக காட்சி தருகிறாள்.

முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். சோழர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு அம்மன்னர்கள் விளக்கெரிக்கவும், நிவேதனத்திற்காகவும், விழாக்கள் எடுக்கவும் நிலமும் பொன்னும் தந்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவையாறு மற்றும் திருக்கண்டியூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. தொடர்பு : சிவ. கண்ணன் டிரஸ்டி : 09943884377. மனோகர் அகோர சிவம் : 08344658671.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com