திருநல்லம் (கோனேரிராஜபுரம்)

இறைவர் திருப்பெயர்: உமாமகேஸ்வரர், பூமீஸ்வரர், பூமிநாதர்.
இறைவியார் திருப்பெயர்: தேகசௌந்தரி, அங்கவளநாயகி.
தல மரம்: அரசு
தீர்த்தம் : பிரம தீர்த்தம்.
வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர்

தல வரலாறு

      • இங்கு இறைவன் (வைத்தியநாதர்), புரூரவமன்னனின் குட்டநோயைத் தீர்த்ததாக சொல்லப்படுகிறது. (இச்சந்நிதியில் ஜபம் செய்தால் பலமடங்கு பயனுண்டு என்று சொல்லப்படுகிறது).

 

தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	கல்லால் நிழல்மேய. 
				  2. அப்பர்   -	கொல்லத் தான்நம னார்தமர்.

சிறப்புக்கள்

      • கண்டராதித்த சோழன் மனைவியான செம்பியன் மாதேவியின் திருப்பணிப் பெற்ற தலம். 
      • கல்வெட்டில் இறைவன் ‘திருநல்லம் உடையார் ‘ என்று குறிக்கப்படுகிறார்.
      • இங்குள்ள கல்வெட்டுக்கள் இராசராசன், இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலத்தியவை.

      • வேங்கிபுரம் முதலிப்பிள்ளை என்பவன் நன்கொடையால் கோயில் கட்டப்பட்டதாகவும், ‘நக்கன் நல்லத் தடிகள்’ என்பவனால் சண்டேசுவரர் உற்சவத் திருமேனி செய்து தரப்பட்டது என்றும், குந்தவை பல நன்கொடைகளைக் கோயிலுக்குத் தந்துள்ளாள் என்றும் பல செய்திகள் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகின்றன.

         

      • தலபுராணம் சமஸ்கிருதத்தில் உள்ளது.
      • காரணாகம முறைப்படி பூசைகள் நடைபெறுகின்றன.

மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் – வடமட்டம், ஆடுதுறை – வடமட்டம் செல்லும் பேருந்துகளில் சென்று கோனேரிராஜபுரம் கூட்ரோடில் இறங்கி 1 கி. மீ. சென்றால் ஊரை அடையலாம். தொடர்புக்கு :- 0435 – 244 9830 , 244 9800.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com