திருநல்லூர் கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: கல்யாணசுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர், பெரியாண்டேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: கல்யாண சுந்தரி, திரிபுரசுந்தரி, பர்வதசுந்தரி.
தல மரம்: வில்வம்.
தீர்த்தம் : சப்தசாகர தீர்த்தம்.
வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர் ,அகத்தியர், பிருங்கி முனிவர், வாயு.

தல வரலாறு

   • கயிலை மலையிலிருந்து வாயுவால் ஏவப்பட்ட இரு சிகரங்களில் ஒன்று இத்தலம். (மற்றது ஆவூர்). இச்சிகரத்தில் இறைவன் எழுந்தருளியுள்ளார். இது சுந்தரகிரி எனப்படுகிறது.

     

   • திருநாவுக்கரசருக்கு ஈசன் திருவடி சூட்டியத் திருத்தலம். 
   • பிருங்கி முனிவர் வண்டு வடிவம் தாங்கி, வழிபட்ட தலம். 
   • அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலக் காட்சி வழங்கியது.

 

 

 

தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	1. கொட்டும் பறைசீராற், 
					2. பெண்ணமருந் திருமேனி, 
					3. வண்டிரிய விண்டமலர்

			 2. அப்பர் -	1. அட்டுமின் இல்பலி யென்றன், 
					2. நினைந்துருகும் அடியாரை.

தல மரம் : வில்வம்

சிறப்புகள்

   • அமர்நீதி நாயனாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் முக்தி கிடைத்த திருத்தலம். அவர் இருவரின் பிரதிமைகள், கற்சிலையிலும், செப்புச் சிலையிலும் உள்ளன.

     

   • இறைவரின் இலிங்கத் திருமேனி நாள்தோறும் ஐந்துமுறை நிறம் மாறும் தன்மையுடையது. 
   • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்றத் திருத்தலம்.
   •  
   • இஃது கோட்செங்கணாரின் மாடக்கோவிலாகும். 
   • சோழர் கால கல்வெட்டுகள் 22ம், முஹாய்சரர் கல்வெட்டு ஒன்றும் ஆக 23 கல்வெட்டுகள் உள்ளன.
   • நல்லூர்ப் புராணம் – திருவல்லிக்கேணி சடகோபராமாநுஜாசாரியர்.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இத்தலம், கும்பகோணம் – தஞ்சை இரயில் பாதையில் சுந்தரப்பெருமாள் இரயில் நிலையத்திலிருந்து தெற்கே 3-கி.மீ. தூரத்தில் உள்ளது. பாபநாசம் என்னும் தலத்திற்கு கிழக்கே 5-கி.மீ. தொலைவு. (வலங்கைமான் – பாபநாசம் சாலை) தொடர்புக்கு : 9443524410.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com