திருநெடுங்களம்

இறைவர் திருப்பெயர்: நித்யசுந்தரேஸ்வரர், நெடுங்களநாதர்.
இறைவியார் திருப்பெயர்: மங்களநாயகி, ஒப்பிலா நாயகி.
தல மரம்: வில்வம்.
தீர்த்தம் : அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்.
வழிபட்டோர்: அகத்தியர்,சம்பந்தர்.

 

தல வரலாறு

      • மக்கள் கொச்சையாக பேசும்போது மட்டும் இத்தலத்தை ‘திருநட்டாங்குளம்’ என்கின்றனர்.

         

      • தவஞ்செய்த அம்பிகையை இறைவன் கள்ள உருவில் தோன்றிக் கைத்தலம் பற்ற, அச்சமுற்று அம்பிகை ஓடியொளிந்த இடம், ஒளிமதிச்சோலை என்று வழங்குகிறது.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - மறையுடையாய் தோலுடையாய்.

தல மரம் : வில்வம்

சிறப்புகள்

      • இங்குள்ள வெண்கலக்குதிரை விந்தையான அமைப்புடையது.

 

      • மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடமைந்தது.

      • நெடுங்களப் பதிகத்தில் வரும் பாடற் கருத்துக்கள் அனைத்தும் ராஜ கோபுரத்தில் முன்னும் பின்னும் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

         

      • மூலத்தானத்தின் மேல் இரு விமானங்கள் அமைந்து புதுமையாகக் காட்சியளிக்கின்றன.

         

      • இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு அற்புதமானது – யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார்.

      • கல்வெட்டில் இத்தலம் “பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திருநெடுங்களம்” என்றும்; இறைவன் பெயர் “நெடுங்களத்து மகாதேவர் ” என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

         

      • இத்தலத்தில் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சி – தஞ்சை சாலையில் வந்து துவாக்குடி என்னுமிடத்தில் பிரியும் சாலையில் 4 கி. மீ. சென்று நெடுங்களத்தையடையலாம். திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து நகரப் பேருந்து செல்கின்றன. திருச்சி – மாங்காவனம், நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. தொடர்பு : 0431 – 2520126

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com