திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: பாலாம்பிகை.
தல மரம்:  வில்வம்
தீர்த்தம் : காவிரி
வழிபட்டோர்: சரசுவதி, காமதேனு, கௌதமமுனிவர் ஆகியோர்.

தல வரலாறு

   • மக்கள் வழக்கில் தில்லைஸ்தானம் என்று வழங்கப்படுகிறது.
   • சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று.

 

தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	மையாடிய கண்டன்மலை. 
				 2. அப்பர்  -	1. காலனை வீழச் செற்ற, 2. பாரிடஞ் சாடிய, 
						3. கொல்லி யான்குளிர், 4. வகையெலா முடையா
						5. மெய்த்தானத் தகம்படியுள்.

சிறப்புகள்

   • இங்கு இறைவனுக்கு பசு நெய் அபிஷேகம் விசேஷமானது.
   • அம்பிகையின் திருப்பெயர் தேவாரப் பதிகத்துள் இளமங்கையம்மை என்றும் குறிக்கப்படுகிறது.
   • கல்வெட்டுக்களில் இத்தலம் “இராஜராஜ வளநாட்டு பைங்காநாட்டு திருநெய்த்தானம்” என்றும்; சுவாமியின் பெயர் நெய்த்தானமுடையார் என்றும் குறிக்கப்படுகிறது.
   • இக்கல்வெட்டுக்களிலிருந்து, நிபந்தமாக நிலங்கள் அளித்தமை, விளக்கெரிக்கப் பொற்காசுகள் தந்தமை, ஊர்ச்சபையதார் ஸ்தபன மண்டபம் கட்டியது, கோயிற் பணியாளர்களுக்கு நிலங்கள் அளித்தமை, சுவாமியின் நைவேத்தியத்திற்கு நிலங்கள் விட்டது முதலியன தெரியவருகிறது.
   • இலங்கையரசன் கயவாகு என்பவன் இப்பெருமானைத் தன் குலதெய்வமாகக் கொண்டு திருவிழாக்கள் செய்வித்த செய்தியும் கல்வெட்டால் தெரியவருகிறது.
   • இக்கோயிலில் பல்லவர்களும் திருப்பணி செய்துள்ளனர் என்பதற்குச் சான்றாக சிம்மத் தூண்கள் உள்ளதைக் காணலாம்.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவையாற்றுக்கு மிக அருகாமையில் உள்ளது. தொடர்பு : 04362 – 260553

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com