திருப்பாம்புரம் ஆலய சிறப்புகள்

சைவ சமயக் குரவர்களால் பாடப் பெற்ற 59-வது திருத்தலம் இது. இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கல்வேட்டு கோவிலில் காணப்படுகிறது. சோழ மன்னர்கள் காலத்தில் செங்கற் கோவிலாக இருந்த கோவில்தான் கற்கோவிலாக மாற்றம் அடைந்தன. அதில் இந்தக் கோவிலும் ஒன்று.

பாம்பு+ புரம்- ஆதிஷேசன். வாயு, ஆதிசேஷன் போட்டியினால் சினம் அடைந்த சிவனிடம் சாபம் பெற்ற ஆதிசேஷன் 12 ஆண்டுகள் வழிபட்டு சாபம் நீங்கிய தலம். பிரம்மா, இந்திரன், பார்வதி, அக்னி, தட்சன், அகத்தியர், ஆதிசேடன், சுனிதன், கங்காதேவி, சந்திரன், சூரியன் ஆகியோர் வழிபாடு செய்து பலன் பெற்றுள்ளனர்.

வடமொழிக்கு ஈடானது தமிழ் என தேவர்கள் முனிவர்களுக்கெதிராக வாதிட்ட அகத்தியர் ஊமையாக சாபம் பெற்று இங்கு சிவராத்திரி 1ம் சாமத்தில் வழிபட்டு சாபம் நீங்கினார்.

பிரம்மா தன்னால் படைக்கப்பட்ட திலோத்தமையின் அழகில் மயங்கி சாபமடைந்து இங்கு ஓராண்டு வழிபட்டு சாபம் நீங்கியது.

தட்சன் வேள்வியில் கலந்து கொண்ட அக்னி சாபமடைந்து இங்கு சிவராத்திரி 2-ம் சாமத்தில் வழிபட்டு பேறு பெற்றார்.

சிவனின் கண்களை மூடிய பார்வதி 12 ஆண்டுகள் இங்கு தவமிருந்து சிவராத்திரி 4ம் சாமத்தில் வழிபட்டு பேறு பெற்றார்.

தட்சனின் யாகசாலை சிதைத்து தலையை வீரபாகு வெட்ட தேவர்கள் சிவனை சாந்தப்படுத்தி தட்சனின் உடலில் ஆட்டுத்தலையை ஒட்டி உயிர்பிக்க கர்வம் அடங்கி 12 ஆண்டுகள் பூஜை செய்து சிவராத்திரி 4ம் சாமத்தில் பேறு பெற்றார்.
திருப்பாம்புரம் ஆலய சிறப்புகள்
கங்கை தன்னிடம் சேர்ந்த பாவங்களைத் தொலைக்க இங்கு பூஜை செய்து சிவராத்திரி 2ம் சாமத்தில் பேறு பெற்றார். சூரியன் கங்கையில் நீராடி மயூரநாதரை வழிபட்டு பாம்புரத்தில் 1000 பூக்களால் 12 ஆண்டுகள் அர்சித்து தன்னுடன் ஒளியை கூட்ட அருள் பெற்றான்.

சுனிதன் தன்னுடைய முயலகன் நோய் தீர வழிபட்டான். கோச்செங்கட் சோழன் குட்ட நோய் தீர வழிபாடு. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிற கோயில்களில் இருப்பதைப் போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற தலம்..

இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது..

ஈசனின் பஞ்ச முகங்களை குறிக்கும் வகையில் அமையப்பெற்ற பஞ்சலிங்க தலம். இந்திரன் சாபம் நீங்கிய தலம். கங்கை பாவம் தொலைந்த தலம்.
சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்டு திருபாம்புரம் ஒரு சிறந்த தலமாக இருக்கிறது.

ஆனை தொழுத தலம் திருஆனைக்கா எனவும், எறும்பு தொழுத தலம் திறு எறும்பூர் எனவும் வழங்கப்படுவதுபோல, பாம்பு தொழுத இத்தலம் திருப்பாம்புரம், “பாம்புரம்” எனப் பெயர் கொண்டது.

திருஞானசம்பந்தர் தன் தேவாரப் பாடல்களில் இத்தலத்தைப் “பாம்புர நன்னகர்” என்று குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகத்திலும், சுந்தரர் தம் தேவாரத்திலும் இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். அருணகிரிநாதரும் திருப்புகழில் இத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

இத்தலத்தில் ஆதிசேடன் வழிபட்டான் என்பது நம்பிக்கை. பிரம்மா, இந்திரன், பார்வதி, அகத்தியர், அக்னி, தட்சன், கங்காதேவி, சூரியன், சந்திரன், சுனிதன், கோச்செங்கண்ணன் போன்றோர் பூஜை செய்த தலம்.

அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன்,சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள் மற்றும் நாகராஜரான ஆதிசேடன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். இந்நாள் வரை இவ்வூரில் அகத்திப் பூப்பதில்லை. ஆலம் விழுதுகள் தரை தொடுவதுமில்லை. இந்த ஊரில் பாம்பு தீண்டி இதுவரை யாரும் இறந்ததில்லை. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோவில் ஒரு பஞ்சலிங்க தலமாகும். சுவாமி சந்நதியை சுற்றி கல் அகழி உள்ளது.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com