
திருமண வாழ்க்கையில் பிரச்சினையை காண்பவர்கள் அப்பிரச்சினையில் இருந்து விடுதலை பெற விரதம் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் (காலை 10.30-12.00 மணி வரை) தீபம் ஏற்றி வணங்குதல் வேண்டும். இவ்வாறு 11வாரம் செய்து முடித்த பிறகு 12-வது வாரம் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டினை செய்ய திருமண வாழ்வில் தம்பதியினருக்கிடையே ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும்.
திருமண வரம் கூடிவந்தவுடன் காணிக்கையாக 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக்கி அம்மனுக்கு சாற்றலாம். அதே போல் தம்பதிகள் மேற்கண்ட வழிபாட்டை செய்து தங்கள் பிரச்சினை தீர்ந்தவுடன் அரக்குக் கலர் பட்டு பாவாடை சாற்றலாம்.
Please follow and like us: