திருமீயச்சூர்

இறைவர் திருப்பெயர்: முயற்சி நாதர், மேகநாதர்.
இறைவியார் திருப்பெயர்: சௌந்திரநாயகி, சுந்தரநாயகி, லலிதாம்பாள்.
தல மரம்: வில்வம்.
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி.
வழிபட்டோர்: சூரியன்,சம்பந்தர்.

தல வரலாறு

   • திருமீயச்சூர்  திருத்தலத்தில் சூரியனாருக்கு அருளிய ஈசன், ஸ்ரீமேகநாதர் எனும் திருநாமத்துடன், கஜபிருஷ்ட விமானத்தின்  கருவறையில், சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார்.
   • இத் தல இறைவியின் புகழ், இத் தலத்தில் தோன்றிய “லலிதா சகஸ்ரநாமம்” என்னும் சிறப்புமிகக தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் “லலிதா பஞ்சரத்னமாலை ” என்ற தோத்திரமும் தோன்றிற்று.

தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் – காயச்செவ்விக் காமற்.

சிறப்புக்கள்

   • இத் தல அம்பிகை மிகச் சிறப்பு.
   • சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு, பாண்டியர் காலத்தவை மூன்றும் ஆக ஏழு கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.
   • ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம்.

    கோவிலின் உள்ளேயே திருமீயச்சூர் இளங்கோயில் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது.

    வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது.

    தினமும் மாலை வேளையில் மட்டும் ஒரு கிளி துர்க்கா சன்னதியில் இருந்து லலிதாம்பிகை சன்னதிக்கு சென்று  வருவதைக் காணலாம்.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, மயிலாடுதுறை-பேரளம் இரயில்பாதையில், பேரளம் நிலையத்திற்கு மேற்கே 3கீ.மீ.தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும் பேரளத்திலிருந்தும் பஸ் வசதி உள்ளது. தொடர்புக்கு :- 94448 36526 , 04366 – 239 170.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com