திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பழுது காரணமாக முடங்கிக் கிடந்த தங்கத் தேரை சீரமைக்கும் பணி ஒரு மாதத்தில் நிறைவு பெற்று, தை மாதத்தில் வெள்ளோட்டம் நடைபெறும் என்று கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள தங்கத் தேரை இழுத்து வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, தங்கத்தேர் பழுதடைந்தது.இதையடுத்து, இரும்பு தகரக் கொட்டகையில் (பிடாரி அம்மன் சன்னதி எதிரே) தங்க தேர் நிலை நிறுத்தப்பட்டு பூட்டி வைக்கப்பட்டது.
தங்கத் தேரை பழுது பார்த்து, மீண்டும் பயன் பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் கோவில் நிர்வாகத்துக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், தங்கத்தேரை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. உபயதாரர்கள் மூலம் ரூ. 3.5 லட்சம் மதிப்பில் பணி நடைபெறுகிறது.
இதுகுறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் கூறும்போது, தங்கத்தேர் கடந்த 3 ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது.
அதனை புதுப்பிக்கும் பணி நேற்று தொடங்கியது. 1 மாதத்துக்குள் பணி நிறைவு பெற்று விடும். தங்கத்தேர் வெள்ளோட்டம் தை மாதத்தில் நடைபெறும் என்றார்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.