அதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்தி புறப்பாடும், சிம்ம வாகனத்திலும், கடந்த 2-ந் தேதி காலை கோ ரதத்திலும், மாலை வெள்ளி மஞ்சத்திலும், தொடர்ந்து பல்லக்கிலும் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் அம்மன் வீதியுலா வந்தார். தொடர்ந்து அம்மன் சன்னதியில் ஏற்றி, இறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 11-ம் நாள் வெள்ளி மஞ்சத்தில் சாமி எழுந்தருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் நேற்று இரவு 7 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்றது. அப்போது சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனத்தில், பஞ்சமூர்த்திகளுடன் தெப்பத்தில் எழுந்தருளி 5 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தனர். பின்னர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்பாள் அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.