திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா வருகிற 10-ந்தேதி(புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.
அதை தொடர்ந்து 14-ந் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் நிகழ்ச்சியும், 18-ந் தேதி தேரோட்டமும், 21-ந் தேதி சப்தஸ்தான பெருவிழாவும் நடைபெறுகிறது. சப்தஸ்தான விழாவையொட்டி காலை ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர்் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது.

22-ந் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் ஐயாறப்பர் கோவிலுக்கு சென்று தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பின்னர் பல்லக்குகள் அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றடையும். இந்த விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com