பில்லி, சூனியம், துர்மந்திரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரத்தை முறைப்படி செய்து வந்தால் தடைகள் நீங்கும்.
தேய்பிறை ஞாயிறு அல்லது செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குள் இந்த பூஜையைத் தொடங்க வேண்டும். ஸ்ரீ காளி தேவியின் படம் வைத்து அதன் முன் ஒரு புது கருப்புத்துணியில் கொஞ்சம் பன்னீர் தெளித்து அதன் மேல் ஒரு புது அகல் விளக்கேற்றி விளக்கின் முன் மஞ்சள் தடவிய தேங்காய் ஒன்று வைக்கவும்.
கருப்பு நிறக் கம்பளி அல்லது கருப்புத் துணியில் அமர்ந்து கருப்பு ஆடை அணிந்து கருமணி மாலை வைத்து வடக்கு முகமாக அமரவும். முதலில் 18 எண்ணிக்கை செந்நிறப்பூக்களால் விளக்கின் பாதத்தில் அர்ச்சித்து ஜபம் செய்த பின் தீபத்தை பார்த்தபடி 1008 உரு ஜெபிக்கவும்.
ஜபம் முடிந்த பின் விளக்கின் முன் வைக்கப்பட்ட தேங்காயை எடுத்து விளக்கை 3 தடவை சுற்றி ஸ்ரீ காளி மாதாவை வணங்கி எந்தத் தீய மந்திரங்கள் / சக்திகளின் பாதிப்பு இருந்தாலும் அவை உன் மேல் ஆணையாக நீங்கட்டும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டேபாதிக்கப்பட்டுள்ள நபர் அல்லது இடத்தை 3 தடவை சுற்றி அந்தத் தேங்காயைத் தெற்கு முகமாக நின்று எரித்துவிடவும்.
பின்னர் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து அருகில் உள்ள அம்மன் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டுக் குங்குமம் வைத்துக்கொள்ளவும். இதை செய்யும் போது வெளிநபர்களை அழைக்காமல் செய்வது சிறப்பு.
முக்கியமான விஷயம் : பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு அன்றைய தினம் படுபட்சி நாளாக இருக்கக்கூடாது.
மந்திரம்:-
ஓம் க்ரீம் தந்த்ரபாத நிவாரணாய க்லீம் ஓம் பட் ||
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.