தென்குடித்திட்டை (திட்டை)

இறைவர் திருப்பெயர்: வசிஷ்டேஸ்வரர், பசுபதீஸ்வரர், பசுபதிநாதர், தேரூர்நாதர், தேனுபுரீஸ்வரர், ஸ்வயம்பூதே.
இறைவியார் திருப்பெயர்: உலகநாயகி, மங்களாம்பிகை, மங்களேஸ்வரி, சுகந்தகுந்தளாம்பிகை.
தல மரம்: சண்பகம். (தற்போதில்லை.)
தீர்த்தம் : சூல தீர்த்தம். (இதற்கு சக்கர தீர்த்தம் என்றும் பெயர்)
வழிபட்டோர்: சம்பந்தர்,வசிட்டர், தேவர், பைரவர், முருகன், பிரமன், திருமால், காமதேனு, ஆதிசேஷன் ஆகியோர்.

 

தல வரலாறு

   • காவிரியின் கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் – திட்டில் – அமைந்துள்ள ஊராதலின் திட்டை எனப் பெயர் பெற்றது.
   • உலகப் பிரளய காலத்தில் இப்பகுதி திட்டாகத் தோன்றியதென்றும், இறைவன் சுயம்பாக வெளிப்பட்டு அருள்புரிந்தான் என்பதும் வரலாறு. இதனால் ‘குடித்திட்டை’ எனப் பெயர் பெற்றது .எனவும் கூறுவர்
   •  
   • சுமாலி என்பவனின் தேர் அழுந்திய இடமாதலின் ரதபுரி – தேரூர் என்றும்; காமதேனு வழிபட்டதால் தேனுபுரி என்றும்; ரேணுகை வழிபட்டதால் ரேணுகாபுரி என்றும் இத்தலம் விளங்குகிறது.

 

தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - முன்னைநான் மறையவை.

 

தல மரம் : சண்பகம்

சிறப்புகள்

   • இக்கோயில் நல்ல கட்டமைந்த கற்கோயில்; எல்லாச் சந்நிதிகளும் மழமழப்பாக்கப்பட்ட கருங்கற்களால் ஆனவை.
   • மூலவர் சுயம்புத் திருமேனி. பிரமரந்திரத்திலிருந்து சிவலிங்கத் திருமேனியின் மீது நீர் சொட்டுவது இத்தலத்தில் வியப்புக்குரிய ஒன்றாகும். 25 மணித்துளிகளுக்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் சுவாமிமீது இன்றும் சொட்டுகிறது. தொன்றுதொட்டு, சுவாமியின் விமானத்துள் சந்திரகாந்தக்கல் இருந்து வருவதாகவும், 1922-ல் இவ்விமானத்தைப் பழுதுபார்த்துக் கட்டும்போது அக்கல் அப்படியே வைத்துக் கட்டப்பட்டுள்ளதாகவும், அதுவே சந்திரனின் ஈரத்தை வாங்கித் தேக்கி வைத்துச் சொட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. 
   • இத்தல புராணம் சமஸ்கிருதத்தில் “தக்ஷிண குடித்வீப மஹாத்மியம்” என்ற பெயரில் உள்ளது. திரு. வி. பத்மநாபன் என்பவர் கிரந்தத்தில் உள்ள “சுயம்பூதேஸ்வரர் புராணத்தை” – இத்தலபுராணத்தை தமிழாக்கம் செய்துள்ளதாகத் தெரிகிறது.
   • (இத்திருக்கோயிலை 1926-ல் கற்கோயிலாகக் கட்டிய பலவான் குடிகிராமம் ரா. கு. ராம, இராமசாமி செட்டியாரின் உருவம் அவர் மனைவியுடன், கைகுவித்து வணங்கும் நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.)

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் – திருக்கருக்காவூர் நகரப் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கிறது. தஞ்சை – மயிலாடுதுறை இருப்புப் பாதையில் உள்ள புகைவண்டி நிலையம். தொலைபேசி : 09443586453, 04362-252858.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com