எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந்
தானும் உடனே காண்க காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
சிவபெருமானை போற்றும் இந்த திருவாசக மந்திரத்தை தினந்தோறும் கூறி வழிபடுவது நல்லது. இந்த திருவாசக மந்திரத்தை துதித்து வழிபட தெய்வ வசியம் ஏற்படும். குரு கிரகத்தின் அம்சம் கொண்ட தட்சிணாமூர்த்தியின் அருளால் குரு கிரக தோஷங்கள் நீங்கும்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.