‘தைரியலட்சுமி துணையிருந்தால் இழந்ததெல்லாம் மீண்டுவரும்’- விக்ரமாதித்தன் கதை!

அஷ்ட லட்சுமிகளில் எந்த லட்சுமியின் அருள் அவசியம் தேவை என்பதை விளக்கும் கதை…

 Image result for dhairya lakshmi withvikaramatithanதி லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என்று, மகா லட்சுமி எட்டு திருவடிவங்களில் எட்டு வகையான செல்வங்களை நமக்கு அருள்கிறாள் என்பது ஐதீகம். இந்த எட்டு லட்சுமிகளில் ஒருவரின் அருள் மட்டும் நமக்குக் கிடைக்கவில்லை என்றால், மற்ற லட்சுமியரின் அருளும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். மற்ற லட்சுமிகள் நம்மை விட்டு விலகினாலும், ஒரு லட்சுமி மட்டும் நம்மை விட்டு விலகவே கூடாது. அந்த லட்சுமி யார் தெரியுமா?

அதுபற்றி பின்வரும் விக்கிரமாதித்யன் கதை நமக்கு விவரிக்கிறது…

கன்னியாபுரியை ஆட்சி செய்து வந்த ராஜா பர்த்ருஹரி, வாழ்வின் மீது கொண்ட விரக்தியினால் தனது அரசப் பதவியைத் துறந்துவிட்டுத் தவம் செய்ய காட்டுக்குச் சென்றுவிட்டான். பர்த்ருஹரியின் விருப்பப்படி அவருடைய தம்பி விக்கிரமாதித்யன் அரியணை ஏறினான். பட்டி அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டான். விக்கிரமாதித்தன் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்துகொண்டு வந்தான். நாடு அனைத்து வளங்களுடனும் செழித்துச் சிறந்திருந்தது. மக்கள் அனைவரும் கவலை என்றால் என்னவென்றே தெரியாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அவனுக்கும் சோதனைக் காலம் தொடங்கியது. அவனுடைய கிரகநிலைகள் மாறத் தொடங்கின. அதுவரை அவனுக்கு அனைத்து அதிர்ஷ்டங்களையும் வாரி வழங்கிக்கொண்டிருந்த கிரகங்கள் அனைத்தும் அவனுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கின.

 

கிரக நிலைகள் மாறத் தொடங்கியதுதான் தாமதம். அவனுக்கு அருள்புரிந்துகொண்டிருந்த அஷ்ட லட்சுமியரும் ஒவ்வொருவராக அவனை விட்டு விலகத் தொடங்கினார்கள். விக்கிரமாதித்யனின் நாட்டை விட்டு  முதலில் வெளியேறியவள் ஆதிலட்சுமி. அவள் விலகிச் சென்றதுதான் தாமதம், நாட்டில் எங்குப் பார்த்தாலும் கொள்ளை நோய் பரவியது. நோயின் தாக்கத்தால் மக்கள் கூட்டம் கூட்டமாக மடிந்து போனார்கள். ஆதிலட்சுமி விலகியதால் ஏற்பட்ட இந்த நிலை மாறுவதற்கு முன்பே அடுத்ததாக தான்ய லட்சுமி வெளியேறினாள். நாட்டில் மிகப்பெரிய பஞ்சம். ஒருவேளை உணவுக்கே அனைவரும் கஷ்டப்படும் நிலை உருவானது. அரண்மனையில் சேர்த்து வைத்திருந்த உணவு தானியங்கள் அனைத்தும் குறுகிய காலத்தில் தீர்ந்து போனது. அடுத்து வெளியேறியவள் தன லட்சுமி. சேர்த்து வைத்திருந்த செல்வம் அனைத்தும் கரைந்து போனது. இவர்களைத் தொடர்ந்து கல்விக்கு உரிய வித்யா லட்சுமி, வெற்றி தேடித் தரும் விஜயலட்சுமி, குழந்தைப் பேறு அளிக்கும் சந்தான லட்சுமி, நற்பாக்கியம் அளிக்கும் கஜ லட்சுமி என்று ஒவ்வொருவராக விலக, விலக விக்கிரமாதித்யனின் நாட்டிலும், அவனது அரண்மனையிலும் வறுமையும் கவலையும் சூழ்ந்தது. தனக்கு அருள் புரிந்துகொண்டிருந்த அஷ்ட லட்சுமிகள் ஒவ்வொருவராக விலகிக் கொண்டிருந்ததைக் கண்ட விக்கிரமாதித்யன் செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தான். அவனது மனதில் கவலைகள் சூழத் தொடங்கின. தைரியம் அவனை விட்டு விலகத் தொடங்கியது. தைரிய லட்சுமியும் தன்னைவிட்டு விலகிக் கொண்டிருப்பதை உணர்ந்த விக்கிரமாதித்யன் ஓடிச் சென்று தைரிய லட்சுமியின் கால்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு,

Related image

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com