அட்சரப் பிரதோஷம் என்பது வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். நான் என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர் என்கிறது புராண கதை. 2020ஆம் ஆண்டில் 5 சனிப்பிரதோஷம் வருகிறது. இது அட்சரப்பிரதோஷம் எனப்படுகிறது.

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.
சனிப்பிரதோஷ நாளில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நாளில் மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.
நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும். பிரதோஷ நாளில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.
சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். சனிப் பிரதோஷ நாளில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலன் கிடைக்கும். இந்நாளில் வசதி உள்ளவர்களும், அடியார்களும் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது. ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, சட்ஜ பிரபா பிரதோஷம். தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தாராம். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

2020 ஆம் ஆண்டில் எந்த நாளில் என்ன பிரதோஷம் வருகிறது என்று பார்க்கலாம். 2020ஆம் ஆண்டில் பிரதோஷ கால அட்டவணை. 08.01.2020 புதன்கிழமை
22.01.2020 புதன்கிழமை
06.02.2020 வியாழக்கிழமை
21.02.2020 வெள்ளிக்கிழமை
07.03.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
21.03.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
05.04.2020 ஞாயிற்றுக்கிழமை
20.04.2020 திங்கட்கிழமை (சோமவார பிரதோஷம்)
05.05.2020 செவ்வாய்க்கிழமை
20.05.2020 புதன்கிழமை
03.06.2020 புதன்கிழமை
18.06.2020 வியாழக்கிழமை
02.07.2020 வியாழக்கிழமை
18.07.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
02.08.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
16.08.2020 ஞாயிற்றுக்கிழமை
30.08.2020 ஞாயிற்றுக்கிழமை
15.09.2020 செவ்வாய்க்கிழமை
29.09.2020 செவ்வாய்க்கிழமை 14.10.2020 புதன்கிழமை 28.10.2020 புதன்கிழமை 12.11.2020 வியாழக்கிழமை 27.11.2020 வெள்ளிக்கிழமை 12.12.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
27.12.2020 ஞாயிற்றுக்கிழமை
14.10.2020 புதன்கிழமை
28.10.2020 புதன்கிழமை
12.11.2020 வியாழக்கிழமை
27.11.2020 வெள்ளிக்கிழமை
12.12.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
27.12.2020 ஞாயிற்றுக்கிழமை