நாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்

நாம் சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல் செய்த பாவங்களையும் நீக்கி அருளுவார் என்பது ஐதீகம்.

சிவனின் அருளைப் பெற அதுவும் முக்தியைத் தரக்கூடிய வல்லமை வாய்ந்த மிகச் சிறப்பு வாய்ந்த நாளாக கொண்டாடப்படுவது தான் மகா சிவராத்திரி. இந்தாண்டு எப்போது கொண்டாடப்படுகிறது. அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

நாம் சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல் செய்த பாவங்களையும் நீக்கி அருளுவார் என்பது ஐதீகம்.

இப்படிப்பட்ட மிக அருமையான மகா சிவராத்திரி தினம் நாளை வெள்ளிக்கிழமை வருகிறது.

பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட எல்லா ஜீவ ராசிகளும் அழிந்து விட்டன. அந்த சூழலில் இரவு பொழுதில் அன்னை உமாதேவி, ஈசனை நினைத்து பூஜித்து வந்தார். இரவில் நான்கு ஜாமங்களில் ஆகம விதிப்படி சிவனுக்கு அர்ச்சனை செய்தார். வழிபாட்டின் முடிவில் அம்பிக்கை சிவனை வணங்கி வேண்டிக்கொண்டார்.

தான் பூஜித்த இந்த இரவு, ‘சிவ ராத்திரி’ என்று கொண்டாட வேண்டும் என வேண்டிக் கொண்டார். அப்படிப்பட்ட உன்னத நாள் தான் தேவர்களும், மனிதர்களும் இன்றும் சிவ ராத்திரி என்ற பெயரிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

மகா சிவராத்திரி விரதம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, விரதம் இருக்க நாம் வழிபாடு அனைத்தும் நிறைவேறும்.

சிவராத்திரி விரதம் இருக்க வேண்டுமா, எப்படி விரதம் இருக்க வேண்டும், அதன் பலன்கள் என்ன என பலகேள்விகள் நம் மனதில் இருக்கும்.

நாம் எந்த விரதம் இருந்தாலும், அதற்கான பலன்கள் என்ன, எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொண்டு விரதம் இருப்பது நல்லது. அந்த வகையில் சிவராத்திரி தினத்தில் எப்படி விரதம் இருந்தால் சிவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

ஆண்களுக்கு ஒரே ராத்திரி சிவராத்திரி, அம்பாளுக்கு 9 ராத்திரி நவராத்திரி. சிவராத்திரி தினத்தில் முழு விரதம் இருந்து வழிபடக் கூடிய உன்னதமான நாள்.

இந்த புண்ணிய நாளில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

நாம் காலையில் எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து, குளித்துவிட்டு, நெற்றி நிறைய திருநீறு அணிந்து, பஞ்சாட்சரம் என சொல்லக்கூடிய ’ஓம் நமசிவாய’ எனும் நாமத்தை கூறி, நாம் சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்து வருகின்றோம் என்றால், சிவலிங்க பூஜை செய்ய வேண்டும்.

நித்திய பூஜை செய்பவர்கள் அதை செய்யலாம், சாதாரணமாக கடவுள் படங்கள் வைத்து வழிபடுபவர்கள் அந்த வழிபாட்டை செய்யலாம்.காலையில் நாம் பூஜை அறையில் விளக்கேற்றி இரண்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, ஒரு டம்ளர் பால் நைவேத்தியமாக வைத்து வழிபட்டு, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சிவன் பாடல்கள் என்னவெல்லாம் தெரியுமோ அதை எல்லாம் படிக்கலாம். அதோடு ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரிக்கலாம்.

அன்றைய தினம் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிடாமல் இருந்து இரவில் கண் விழிக்க வேண்டும். அப்படி முழு நாளும் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது, உடல்நல பிரச்னை உள்ளது, கர்ப்பிணிகள் பழத்தைச் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

உணவு எடுக்காமல் இருக்க முடியாது என்பவர்கள் முடிந்த வரை அன்றைய ஒருநாளாவது நாம் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், பழங்கள், அவல் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை. தண்ணீர், பழச்சாறு அருந்தலாம்.

சிவ ராத்திரி தினத்தில் நாம் வீட்டில் பூஜை செய்வதோடு இரவில் வீட்டில் சிவலிங்கத்திற்கு நான்கு ஜாம பூஜை செய்து வழிபடலாம். அல்லது கோயிலுக்கு சென்று அங்கு சிவலிங்க செய்யப்படும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளலாம்.

மகா சிவராத்திரி தினத்தில் குறைந்தபட்சம் ஒரு வில்வ இலையாவது சிவனுக்கு நாம் அர்ச்சித்து வழிபடுவது நல்லது. இது முன் வினையையும், இந்த பிறப்பின் வினையையும் அறுக்கும் வல்லமை வாய்ந்தது. சிவனின் துதியும், சிவ ஆராதனையும் அனைத்து நன்மைகளையும் தடக் கூடியது.

சிவராத்திரி தினத்தில் இரவில் தான் மிகுந்த விஷேசம். மாலை நாம் நம் பூஜை அறையில் உள்ள சிவ லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடலாம். அப்படி இல்லாதவர்கள் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடக்கும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளலாம்.

அங்கு சிவனின் நாமத்தை சொல்லி வழிபடுவது அவசியம். குறைந்தபட்சம் அன்று இரவு 1 மணி வரையாவது நாம் கண் விழித்து சிவனை வழிபட வேண்டியது அவசியம்.


Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com