ஒருவருடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில், பாக்கியாதிபதி இருக்கும் இடமறிந்து, அதன் பாதசார பலமறிந்து, நவாம்சத்தில் அது இருக்கும் நிலையறிந்து அதற்குரிய ரத்தினத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் எந்த விரலில், எந்த வடிவத்தில் செய்து அணிய வேண்டுமோ, அப்படி அணிந்து கொண்டால் அற்புதப் பலன் கிடைக்கும். ரத்தினங்கள் மருத்துவக் குணம் கொண்டவை என்பதை அனுபவத்தின் மூலம் நீங்கள் காணலாம்.
மாணிக்க கல் – இதயக் கோளாறை நீக்கும்
வெண்முத்து – தூக்கமின்மையைப் போக்கும்
பவளம் – கல்லீரல் கோளாறை அகற்றும்.
மரகதம் – நரம்புக் கோளாறைக் குணமாக்கும்
வைரம் – இனவிருத்தி உறுப்புகளில்
ஏற்படும் கோளாறைச் சரிசெய்யும்.
வைடூரியம் – சளி, கபம் போன்றவற்றைப் போக்கும்
புஷ்பராகம் – வயிற்றுக் கோளாறைக் குணமாக்கும்
கோமேதகம் – வாயுக் கோளாறை அகற்றும்
நீலம் – வாதநோயைக் குணமாக்கும்.
நவ ரத்தினங்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது நல்ல ஜாதி ரத்தினங்களைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டால் உலகம் போற்றும் வாழ்க்கை அமையும்.
Please follow and like us:
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.