பக்தர்கள் விரதம் இருப்பதை அனுமதிக்காத சாய்நாதர்

நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு ஒரு தினம் பகல் ஆரத்திக்காக மசூதியில் மக்கள் குழுமியிருந்தனர். அக்கூட்டத்தில் நானும் ஒருவன். பாபா என்னை அழைத்து சாப்பிட்டு விட்டு வரச்சொன்னார். அன்று ஏகாதசி என நான் கூறினேன். என்னுடன் வந்த நண்பர்கள் விரதம் அனுஷ்டித்து வந்ததால், நானும் அவர்களுடன் ஒத்துப் போக எண்ணினேன். ஆனால் நான் விரதம் இருப்பதை பாபா விரும்பவில்லை. என் தோழர்களைக் காண்பித்து, இவர்கள் பித்தர்கள். நீ வாடாவுக்குச் சென்று சாப்பிடு என பாபா பணித்தார்.

ஏகாதசி தினத்தன்று சாப்பாட்டுக்கு அலைகிறேன் என முணுமுணுத்துக் கொண்டு வாடாவில் உணவளிப்பவர் ஆரத்தி முடியும் வரையில் சாப்பாடு போட முடியாது எனக் கூறிவிட்டார். அவரும் மசூதிக்கு வந்தார். நானும் சாப்பிடாமல் திரும்பினேன். நான் சாப்பிட்டாகிவிட்டாதா என பாபா மீண்டும் வினவ அது ஆரத்தி வேலை ஆனதால் ஆரத்தி முடியும் வரை சாப்பாடு தள்ளிப் போடப்படலாமென நான் கூறினேன். ஆனால், பாபா விடுவதாக இல்லை. நீ உன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வரும் வரை, ஆரத்தி நிறுத்தி வைக்கப்பட்டு நீ வந்த பின்னரே தொடங்கும் என அவர் கூறி விட்டார். வாடா உரிமையாளரும் பணிய வேண்டி வந்தது. எனக்கு உணவு பரிமாறினார். பின்னர் நான் ஆர்த்திக்காக மசூதிக்கு திரும்பி வந்தேன்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com