பசு உடலில் யார் யார் வீற்றுள்ளனர்?

பசு உடலில் யார் யார் வீற்றுள்ளனர்?
வேதங்களால் போற்றப்படும் பசு. வேதங்களெல்லாம் பசுவை வணங்கச் சொல்கின்றன. அதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? பசுக்கள் இருக்கும் இடம் அருள் சூழும் இடம் என்பதாகும். பசுக்கள் இருக்கும் இடம் ஆரோக்கியத்திற்கு வழிவகுக் கும் இடம் என்பதால்தான்.

பசு உடலின் பல்வேறு பாகங்களில் பல்வேறு தேவர்கள் வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. பசு உடலில் எந்தெந்த இடத்தில் யார்-யார் வீற்றுள்ளனர் என்ற விவரம் வருமாறு:-

தலை – சிவபெருமான்
நெற்றி – சிவசக்தி
வலது கொம்பு – கங்கை
இடது கொம்பு – யமுனை
கொம்பின் நுனி – காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள், சராசரி உயிர் வர்க்கங்கள்
கொம்பின் அடியில் – பிரம்மா, திருமால்
மூக்கின் நுனி – முருகன்
மூக்கின் உள்ளே – வித்யாதரர்கள்
இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்
இரு கண்கள் – சூரியன், சந்திரன்
வாய் – சர்ப்பசுரர்கள்
பற்கள் – வாயுதேவன்
நாக்கு – வருணதேவன்
நெஞ்சு மத்திய பாகம் – கலைமகள்
கழுத்து – இந்திரன்
மணித்தலம் – எமன்
உதடு – உதயாத்தமன சந்தி தேவதைகள் கொண்டை – பன்னிரு சூரியர்கள்
மார்பு – சாத்திய தேவர்கள்
வயிறு – பூமி தேவி
கால்கள் – அனிலன் என்னும் வாயுதேவன்
முழந்தாள் – மருத்து தேவர்
குளம்பு – தேவர்கள்
குளம்பின் நுனி – நாகர்கள்
குளம்பின் நடுவில் – கந்தர்வர்கள்
குளம்பின் மேல் பகுதி – அரம்பையர்
முதுகு – உருத்திரர்
யோனி – சந்த மாதர் (ஏழு மாதர்)
குதம் – லட்சுமி
முன் கால் – பிரம்மா
பின் கால் – உருத்திரன், தன் பரிவாரங்களுடன்
பால் மடி – ஏழு சமுத்திரங்கள்
சந்திகள் தோறும் – அஷ்டவசுக்கள்
அரைப் பரப்பில் – பிதிர் தேவதை
வால் முடி – ஆத்திகள்
உரோமம் – மகா முனிவர்கள்
எல்லா அங்கங்கள் – கற்புடைய மங்கையர்
மூத்திரம் – ஆகாய கங்கை
சாணம் – யமுனை
சடதாக்கினி – காருக பத்தியம்
இதயம் – ஆகவணியம்
முகம் – தட்சரைக்கினியம்
எலும்பு, சுக்கிலம் – யாகத்தொழில் முழுவதும்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com