பட்டீச்சரம்

இறைவர் திருப்பெயர்: பட்டீச்சுரர், தேனுபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: ஞானாம்பிகை, பல்வளை நாயகி.
தல மரம்: வன்னி.
தீர்த்தம் : ஞான தீர்த்தம். (கோடி தீர்த்தம்).
வழிபட்டோர்: மார்க்கண்டேயர் .

தல வரலாறு

   • ஊர் – பழையாறை; கோயில் – பட்டீச்சரம்.
   • காமதேனுவின் புதல்வியருள், “பட்டி” பூசித்தது ஆதலின் பட்டீச்சரம் என்னும் பெயர் பெற்றது.
   • இங்கே அம்பிகை தவஞ்செய்ததால் ‘தேவிவனம் ‘ என்றும் பெயர்.
   • ஞானசம்பந்தர் வரும் காட்சியைக் காண இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு சொன்னதால், இங்குள்ள (ஐந்து நந்திகள் உள்ளன) நந்திகள் சந்நிதியிலிருந்து விலகியே உள்ளன.
   • இராமேஸ்வரத்தில் இராமர் இராமநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுத் திரும்பியபோது இங்கும் வில்முனையால் கோடி தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு. இதனையொட்டி, இங்கும் இராமலிங்கச் சந்நிதியும், கோடி தீர்த்தமும் உள்ளது. 
   • (மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இத்தலத்திற்கு தலபுராணம் பாடத் தொடங்கினார் என்றும் அது முற்றுப் பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது.)

 

தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - பாடன்மறை சூடன்மதி.

 

தல மரம் : வன்னி

சிறப்புக்கள்

   • இங்கு தலவிநாயகராக அனுக்ஞை விநாயகர், மதவாரணப்பிளையார் உள்ளார்.
   • ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தர் அருளிய சிறப்புடைய தலம்.
   • இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன; அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியே உள்ளன.
   • விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற்றது இத்தலத்தில் தான்.
   • இங்குள்ள துர்க்கை சோழர் காலப் பிரதிஷ்டை.
   • ஆனித் திங்கள் முதல் நாளில் ஞானசம்பந்தர் முத்துப்பந்தர் பெற்ற திருவிழா நடைபெறுகிறது.
   • இத்தலபுராணம் சமஸ்கிருதத்தில் உள்ளது. இது தமிழில் உரைநடையில் பட்டீஸ்வரர் மான்மியம் எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் – ஆவூர் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். (சத்திமுற்றமும் பட்டீச்சரமும் அருகருகேயுள்ள தலங்கள் – இடையில் வீதிதான் உள்ளது.) தொடர்புக்கு :- 0435 – 241 6976.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com