பலன் தரும் ஸ்லோகம் : (சத்ரு பயம், மனக்கவலை விலக…)

ஸாஸ்தாரம் ஜகதாம் ப்ரபன்னஜனதா
ஸம்ரக்ஷனே தீக்ஷிதம்
த்ராதாரம் ஸகலாத்பயாத்
ஹரிஹரப்ரேமா ஸ்பதம் ஸாஸ்வதம்!
கந்தாரம் நிஸிரக்ஷணாய
கரிராட்வாஹம் த்ருதம் க்ஷேமதம்
ப்ரத்யக்ஷம் து கலென
த்ரியம்பசுபுரா தீஸம் பஜே பூதயே!!

பொதுப் பொருள்:

உங்களைக் காப்பவரும், தன்னை நமஸ்கரித்த ஜன சமூகத்தை ரக்ஷிப்பதில் தீக்ஷை கொண்டவரும், எல்லா பயத்திலிருந்தும் காப்பவரும், விஷ்ணு, சிவன் இரண்டு பேர்களுடைய அன்புக்கும், பாத்ரமானவரும், அழிவற்றவரும், இரவில் பக்தர்களைக் காப்பதற்காகக் கூடச் செல்பவரும், யானையின் மேல் அமர்ந்தவரும், சீக்ரம் ஷேமத்தைக் கொடுப்பவரும், கலியில் ப்ரத்யஷமானவரும், த்ரியம்பகபுரம் என்கிற (எருமத்தலை ஷேத்திரத்திற்கு ஈசுவரனுமான) ஸ்ரீ மஹா சாஸ்தாவை (ஸ்ரீ ஐயனாரை) பூஜிக்கிறேன்.

(இந்த ஸ்லோகத்தை தினமும் ஜபித்து வந்தால் சனி, ராகு தோஷம் விலகும். சத்ரு பயம், ரோகம், மனக்கவலை நீங்கும்)

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com