பழனி முருகன் கோவிலில் வைகாசி மாத கார்த்திகை உற்சவ விழா

பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி வைகாசி மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது.

தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம், கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று வாரவிடுமுறை என்பதால் அதிகாலை முதலே பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் அனைத்து தரிசன வழிகளிலும், மலைக்கோவிலுக்கு செல்வதற்கான ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களிலும் பக்தர்களின் நீண்ட வரிசையை காண முடிந்தது.
Image result for palani malai temple VILAKU POOJA Related image
மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் உட்பிரகாரத்திலும், 7 மணிக்கு மேல் தங்கரதத்திலும் சின்னக்குமாரர் எழுந்தருளினார். அப்போது சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 187 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com