பழனி மலையில் உள்ள முருகன் சிலையை உருவாக்கியவர் நமது போகர் சித்தர் என்பது உலகறிந்த உண்மை. இவர் ஒன்பது விஷங்களை கட்டி அதை நன்மை பயக்கும் வகையில் சரியான கலவையாக கலந்து நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார். இது போன்ற சிலைகளை உருவாக்க கூடாது என்ற எதிர்ப்புகள் இருந்தும் மானிட நலனுக்காக அவர் இந்த சிலையை உருவாக்கினார். இன்றளவும் பழனி முருகன் சிலையில் உள்ள புனிதமான நவபாஷாணம் மூலமாக தீர பல நோய்கள் தீருகின்றன என்பதை நாமே கண்கூடாக பார்க்கிறோம். அத்தகைய சிறப்பிற்குரிய போகர் பெருமானின் மூல மந்திரம் இதோ.
போகர் மூல மந்திரம்:
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி! –
போகரை வழிபட நினைப்போர்கள் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபிக்கலாம். இதன் மூலம் போகர் பெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும். அதோடு அவர் அருளால் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சொந்தமாக வீடு மனைகள் வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் கிரகணத்தின் ஆதிக்கம் பெற்றவர் போகர் சித்தர். ஆகையால் எவர் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் உள்ளதோ அவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் போகர் பெருமானை முறையாக வழிபாட்டு போகர் மந்திரத்தை கூறுவதன் பயனாக செய்வாய் தோஷம் விலகும்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.