பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் லிங்கமாக காட்சியளிக்கும் சிவன் கோயில் அற்புதங்கள்!
உலகின் மிகப் பழமையான சிவ லிங்கம் ‘ஹரப்பா’ வில் உள்ளது.
அதற்கு அடுத்த பழமையான சிவ லிங்கங்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன. அதில் இரண்டு மிகப் பழமையானவை. ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள சிவ லிங்கம்.
ரேணிகுன்டாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள “குடிமல்லம்” எனும் கிராமத்தில் உள்ள “பரசு ராமேஸ்வர” ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. பல்லவர், பாணர், சோழர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் பழமையானது நந்திவர்மன் காலத்து கல்வெட்டு.
லிங்கம் 5 அடி உயரம். தடிமன் 1 அடி. லிங்கத்தின் தண்டு பகுதி 4 அடி. நுனியில் உள்ள மொட்டு 1 அடி. தண்டுப் பகுதியில் ஓர் வேடன் உருவம் வலது கையில் ஆட்டை தொங்கவிட்டும், மறு கையில் சிறு பாத்திரமும், தோளில் வேட்டை கோடரி (பரசு) யும் வைத்துள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. மார்பில் பூணூல் இல்லை. ஜடாமுடி தரித்துள்ளது. லிங்கத்தின் கீழ் யோனி பீடம் (ஆவுடை) காணப்படவில்லை.
இந்தக் கோயிலில் அம்மன், ஆனந்தவல்லி என்று அழைக்கப்படுகிறார். தனிச் சந்நிதியில் கிழக்குப் பார்த்து அருள்பாலிக்கிறாள். தனது கரங்களில் அங்குசம், பாசம் தாங்கியும், அபயம், வரத முத்திரைகளுடன் கருணை பெருகும் முகப் பொலிவுடன் அருள் பாலிக்கிறாள். பேரழகு வாய்ந்தவள் இவள். நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். இவை தவிர்த்துச் திருச்சுற்றில் தனிச்சந்நிதிகளில் வள்ளி மற்றும் தெய்வானையுடன் முருகப் பெருமானும், சூரிய பகவானும் அருள்புரிகிறார்கள்.
இந்தத் தலத்தில் பரசுராமேசுவரர் வழக்கத்துக்கு மாறாக ஆறு அடி பள்ளத்தில் நின்று அருள்புரிகிறார். அதனால்தான் இந்தக் கிராமத்துக்கு `குடிபள்ளம்’ என்று பெயர் வந்தது. நாளடைவில் குடிபள்ளம் என்ற பெயர் மருவி `குடிமல்லம்’ என்று ஆகிவிட்டது. தற்போது குடிமல்லம் என்று அழைக்கப்பட்டாலும் கல்வெட்டுகளில் இந்த ஊர் திருவிப்பிரம்பேடு என்றும் பேரம்பேடு என்றும் அழைக்கப்படுகிறது. கல்வெட்டுகளில் இறைவனாரின் பெயர் பரசுராமேசுவரமுடைய நாயனார் என்றும் பரசுராம மகாதேவர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த குடிமல்லம் சிவன் கோயில் ASI(Archeological Survey of India) -ன் கட்டுப்பாட்டில் உள்ளது. உலகில் சிவ லிங்கத்தை ஆராய்ச்சி செய்பவர்களின் கருத்துப்படி இதுவே மிகவும் பழமையான சிவ லிங்கம்.
எனவே அக்காலத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்தது போல தமிழ்நாட்டிலும் (இந்தியாவின் பிற பகுதிகளிலும்) ” இக்கோவில் கலை காணப்படுகிறது.
கோயில் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பல்லவ மன்னர்கள், பாண அரசர்கள், சோழ அரசர்கள் ஆகியோர் இந்தக் கோயிலைப் போற்றி வழிபட்டதற்கான 20 – க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயிலில் கிடைத்த சில பழைமையான செங்கற்களைக் கொண்டு இந்தக் கோயில் சாதவாகனர் காலத்தில் செங்கல் தளியாகக் கட்டப்பட்டிருக்கலாம். சாதவாகனர்கள் காலத்தில் செங்கல் தளியாகக் கட்டப்பட்ட இந்தக் கோயில் பல்லவர்கள் காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டு, பிற்காலச் சோழர்களின் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலில் மற்றொரு விசேஷமாக அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை கருவறையில் நீர் ஊறி சிவலிங்கம் நீர்மயமாக மாறிவிடுகிறது. 2005 – ம் ஆண்டு இதுமாதிரி நடந்துள்ளது. அடுத்து 2065 – ம் ஆண்டு இதே மாதிரியான அதிசயம் நிகழும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். சிவபெருமான் மும்மூர்த்திகளின் அவதாரமாக அருள்புரிவதால் இந்தத் தலம் `குழந்தைப் பேறு’ வழங்கும் சந்தான பிராப்தித் தலமாகப் போற்றப்படுகிறது. இதற்குச் சாட்சியாகப் பல்வேறு தாய்மார்கள் கோயிலில் உள்ள நெல்லி மரத்தில் சிறிய தொட்டில் கட்டிச் செல்கிறார்கள்.
மும்மூர்த்திகளின் வடிவமாக அருள்புரியும் சிவபெருமானின் பேரருள் பெறுவோம்…ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் காண வேண்டிய சிவ ஸ்தலம்.
உண்மை மிகவும் சாதாரணமாக இருக்கும் என்பதற்கு இந்த ஊர் சிவ லிங்கம் ஒரு உதாரணம். மக்கள் யாரும் இந்த ஊருக்கு வருவதில்லை. நன்கு விஷயம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த ஊர் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை காண வருகின்றனர். உண்மை ஆன்மீகத்திற்கான திறவுகோல் இந்த சிவ லிங்கம். உண்மையில் தேடுபவர்களுக்கு மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும்.
இத்தனை முக்கியமான சிவன் கோயிலுக்கு மக்கள் வருவதே இல்லை.ஆனால் ரேணிகுண்டாவை தாண்டித்தான் லட்ச கணக்கானோர் திருப்பதிக்கு செல்கின்றனர்.
அப்படி என்ன இந்த சிவ லிங்கத்தில் உள்ளது என்பது எனபதை காண ஆன்மீகவாதிகள் சென்று முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒருமுறையாவது அந்த சிவ லிங்கத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய தவறாதீர்கள்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.