பவுர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலம் சிறப்பானது. அகிலாண்ட கோடி பிரம்மாண்டநாயகி அன்னை அருணாசலேஸ்வரரை வலம் வந்து இடப்பாகம் பெற்ற நாளும் இதுவே.

பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்கள்பெரும் சிறப்புமிக்க அண்ணாமலையை ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தால் சிவலோக பதவி கிடைக்கும். திங்கட்கிழமை வலம் வருவோருக்கு இந்திர லோக பதவி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை வலம் வந்தால் கடன் சுமை குறையும், வறுமை நீங்கும். புதன்கிழமை வலம் வருவோர் கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் பெறுவர்.
இந்நாளில் மலைவலம் வருவது மகத்தான பலனைத் தரும். இதைவிடவும் பவுர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலம் சிறப்பானது. அகிலாண்ட கோடி பிரம்மாண்டநாயகி அன்னை அருணாசலேஸ்வரரை வலம் வந்து இடப்பாகம் பெற்ற நாளும் இதுவே. சந்திரன் தனது பூரண கலைகளுடன் முழுமையான பலத்துடன் காட்சி தருவதும் அன்றுதான். சிவபெருமான் நந்தியாகவும், லிங்கமாகவும் மாறிமாறி காட்சியளிப்பதுடன், சித்தர்கள் சூட்சம வடிவில் வலம் வரும் நாளாகவும் கூறப்படுவதால் பவுர்ணமி அன்று மலைவலம் வருவது உடல்நலம் மனவளம் தரும் உன்னத வழிபாடாக அமையும்.
வியாழக்கிழமை வலம் வருபவர்கள் ஞானம் பெறுவர். வெள்ளிக்கிழமை மலை வலம் வந்தால் வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை வலம் வந்தால் பாவப் பிணிகள் நீங்கும். அமாவாசையில் வலம்வருபவருக்கு முக்தி கிடைக்கும். பிரதோஷ வலம் வந்தால் சகல பாவங்களும் நீங்கும். ஏகாதசியில் வலம் வந்தால் பீடைகள் தொலையும். சிவராத்திரியில் வலம் வந்தால் பிறவிப்பிணி அகலும். மாசி மகத்தில் வலம் வருபவர்களுக்கு தேவர்களுக்கு நிகரான பதவிகிட்டும். தட்சிணாயன புண்ணியகாலத்தில் வலம் வந்தால் தேவர்களால் கணிக்க முடியாத சிறப்பையும், உத்தராயண புண்ணிய காலத்தில் வலம்வந்தால் உயர்ந்த பதவியும் அடைவர்.
குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் வலம்வருவது கூடுதல் பலனைத்தரும். கர்மவினைகளை நீக்கும். மேலும் செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு உகந்தநாள். அன்னை மகிஷாசுரனை அழித்த நாள். அக்னிக்குரிய கிரகம், செவ்வாய். அக்னிக்குரிய தலம் திருவண்ணாமலை. அதனால் இங்கு செவ்வாய்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பெறுகிறது.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.