புதன் கிரக தோஷம் நீங்க, அறிவில் சிறந்து விளங்க புதன் மந்திரம்

நவகிரகங்கள் பல இருந்தாலும் நன்மையான பலன்களை சற்று அதிகமாக தரும் ஒரு சில கிரகங்களில் புதன் கிரகமும் ஒன்று. ஆனால் இந்த புதன் கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் சரியான நிலையில் இல்லையெனில் அவருக்கு “புதன் கிரக தோஷம்” ஏற்படுகிறது. இந்த புதன் கிரக தோஷம் நீங்கவும் தோஷமில்லாதவர்கள் புதன் பகவானின் அருளை பெறவும் கூற வேண்டிய மந்திரம் இது.

புதன் மந்திரம்

ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேண அப்ரதிமம் சுபம்

சௌம்யம் சௌம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம் –

– பொது பொருள் “ஞாழல் பூவின் மொட்டு போல் அழகானவரும், அழகை ஆராதிக்க உவமை இல்லாத சந்திரனின் குமாரனும், அழகானாவருமான புதன் பகவானை வணங்குகிறேன்” என்பது இதன் பொருளாகும். புதன் பகவானுக்குரிய இந்த மந்திரத்தை புதன் கிழமைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று புதன் பகவானின் அம்சமாக இருக்கும் பெருமாளை வணங்கும் போது கூற வேண்டும். மேலும் புதன் கிழமையன்று காலையில் கோவிலுள்ள நவகிரக சந்நிதிக்குச் சென்று, புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி, பச்சை பயிரை நிவேதனமாக வைத்து அவரை வழிபட புதன் கிரகத்தின் தோஷங்கள் நீங்கும். மேலும் அந்த புதன் பகவானின் பூரணமான அருளை நமக்கு பெற்று தரும். இதையும் படிக்கலாமே: எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற பௌர்ணமி பூஜை மந்திரம் புதன் பகவான் பற்றிய குறிப்பு நவகிரகங்களில் ஒரு முக்கியமான கிரகம் புதன் பகவான் ஆவார். புராணங்களின் படி புதன் பகவான் சந்திர பகவானின் புத்திரனாக கருதப்படுகிறார். அதே நேரத்தில் பச்சை நிறமாக விளங்கும் இந்த புதன் பகவான் திருமாலின் அம்சமாகவும் கருதப்படுகிறார். ஒரு மனிதன் சிறந்த அறிவாற்றல் கொண்டிருக்கும் பட்சத்தில் அவன் எப்பேர்பட்ட காரியங்களையும் சாதிக்க முடியும். ஒரு மனிதனுக்கு சிறந்த கணித திறன் அறிவாற்றல் மற்றும் சிந்தனை ஆற்றல் ஆகியவற்றிற்கு புதன் பகவான் காரகனாகிறார். ஒரு மனிதன் பிறக்கும் போது அவனது ஜாதகத்தில் புதன் பகவான் நீச்சமடையும் ராசியில் இருந்தால் புதன் கிரக தோஷம் ஏற்படுகிறது. இதன் காரணமாக அந்த நபர் மந்த புத்தியுடன், கல்வியை சரியாக கற்க முடியாமலும் தனது சிந்தனை திறனை உபயோகித்து வாழ்க்கையில் முன்னேற முடியாமல் இருப்பார். இப்படி பட்டவர்கள் மேற்கூறிய புதன் கிரக தோஷ நிவர்த்தி மந்திரத்தை கூறி வழிபட்டு அந்த தோஷத்திலிருந்து விடுபடலாம்

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com