புரட்டாசி மாதம் என்னென்ன விசேஷங்கள்?

புரட்டாசி 1, செப்டம்பர் 17, திங்கள்  

தூர்வாஷ்டமி. ஜேஷ்டாஷ்டமி. புரட்டாசி மாதப்பிறப்பு. ஷடசீதி புண்யகாலே கன்யாரவி ஸங்க்ரமண ச்ராத்தம் (530. Pm). உப்பிலியப்பன் கோயில் பல்லக்கு. திருமலை திருப்பதி, சென்னை பைராகி மடம் காலை பல்லக்கில் மோஹினி அவதாரம்; இரவு கருட சேவை.  மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு. நந்தனார் குருபூஜை. லட்சுமி விரதாரம்பம். திருப்பதி ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம். திருவஹீந்திரபுரம் தேசிகர் வெண்ணெய்த்தாழி சேவை. நாட்டரசன்கோட்டை எம்பெருமான் பவனி.

புரட்டாசி 2, செப்டம்பர் 18, செவ்வாய்  

நவமி.திருப்பதி, சென்னை பைராகி மடம் காலை ஹனுமந்த சேவை; மாலை வஸந்தோத்ஸவம்; இரவு யானை வாகனம். மதுரை தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசர் ராஜாங்க சேவை. கேதார விரத ஆரம்பம். நாட்டரசன் கோட்டை எம்பெருமான் பவனி.

புரட்டாசி 3, செப்டம்பர் 19, புதன்  

தசமி. கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்; இரவு புஷ்பக விமானத்தில் புறப்பாடு. திருப்பதி, சென்னை பைராகி மடம் காலை சூரியப்பிரபை; இரவு சந்திரப்பிரபை. திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜர் பவித்ர உத்ஸவ ஆரம்பம். .கஜலக்ஷ்மி விரதம். உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீனிவாசப்பெருமாள் மாலை சூர்ணாபிஷேகம்.

புரட்டாசி 4, செப்டம்பர் 20, வியாழன்  

ஏகாதசி. ஸர்வ ஏகாதசி. சென்னை பைராகி மடம், திருப்பதி ரதம்; இரவு குதிரை வாகனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் குதிரை வாகனம்.

புரட்டாசி 5, செப்டம்பர் 21, வெள்ளி  

துவாதசி. திருப்பதி ஸ்ரீவெங்கடேசர் புஷ்கரணியில் சக்கரஸ்நானம்; உத்ஸவ சாற்றுமுறை; தீர்த்தவாரி. திருவோண விரதம். ஸ்ரீவாமன ஜெயந்தி. ஸ்ரீமாதா புவனேஸ்வரி ஜெயந்தி. ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் சாற்றுமுறை. தொட்டி ஸ்ரீசுகப்பிரம்ம மஹரிஷி திருவஹீந்திரபுரம் ஸ்ரவண விசேஷம். மதுரை தல்லாகுளம் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், கரூர், தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேசர், உப்பிலியப்பன் கோயில் ஸ்தல ஸ்ரீனிவாசர் ரதம். திருக்கழுகுன்றம் பவித்ர உற்சவாரம்பம்.

புரட்டாசி 6, செப்டம்பர் 22, சனி  

திரயோதசி.  மகாபிரதோஷம். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. சனிப்பிரதோஷம் நெல்லை கெட்வெல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 5008 வடை அலங்காரம். கரூர் தான்தோன்றி பெருமாள் கஜலக்ஷ்மி வாகனத்தில் பவனி.உத்ரகெளரீ விரதம், புரட்டாசி முதல் சனிக்கிழமை.

புரட்டாசி 7, செப்டம்பர் 23, ஞாயிறு  

சதுர்த்தசி. நரசிங்க முனையரையர் ஜன்மதினம். திருக்கடவூர் ஸ்ரீகால ஸம்ஹார மூர்த்தி அபிஷேகம்; மாலை நடராஜர் அபிஷேகம். அனந்த விரதம். கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேசர் பின்னக்கிளி வாகனத்தில் பவனி. மதுரை தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசர் தெப்பம். திருக்கடவூர் ஸ்ரீகால சம்காரமூர்த்தி அபிஷேகம்,  திருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

புரட்டாசி 8, செப்டம்பர் 24, திங்கள்  

பௌர்ணமி; திருவண்ணாமலை கிரிவலம் 24.9.2018 காலை 7.46AM முதல் 25.9.2018 காலை 8.48AM. நிறை பணி விழா. உமாமஹேஸ்வர விரதம். கரூர் தான்தோன்றி பெருமாள் காலை பல்லக்கு; இரவு கருட சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் ரதம். திருவண்ணாமலை கிரிவலம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மூலவருக்கு திருமஞ்சனம்.

புரட்டாசி 9, செப்டம்பர் 25, செவ்வாய்  

பிரதமை. மஹாளய பக்ஷ ஆரம்பம். அப்பய்ய தீக்ஷிதர் ஜெயந்தி. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஸஹஸ்ர தங்கப் பூமாலை சூடியருளல். திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

புரட்டாசி 10, செப்டம்பர் 26, புதன்  

துவிதியை. கரூர் தான்தோன்றி பெருமாள் ஊஞ்சல். தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு.

புரட்டாசி 11, செப்டம்பர் 27, வியாழன்  

சதுர்த்தி. பிரஹதீ கெளரீ விரதம். ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி வீதி யுலா. ருத்ரபசுபதியார் குருபூஜை.

புரட்டாசி 12, செப்டம்பர் 28, வெள்ளி 

சங்கடஹரசதுர்த்தி, மஹாபரணி. பஞ்சமி.  ராமேஸ்வரம் அம்பாள் தங்கப்பல்லக்கு. பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி வேதவல்லித் தாயாருக்கு திருமஞ்சன சேவை.

புரட்டாசி 13, செப்டம்பர் 29, சனி

சஷ்டி. கிருத்திகை விரதம். ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த திருவண்ணாமலைபெருமாள் கருட சேவை. வேளூர் கிருத்திகை. மஹாவியதீபாதம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு. திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு ஆராதனை.

புரட்டாசி 14, செப்டம்பர் 30, ஞாயிறு  

சப்தமி.  மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு. நந்தனார் குருபூஜை. கும்பகோணம் ஸ்வாமி தேசிகர் உற்சவ சாற்று முறை, ஆராவமுதன் தாயார் சேர்த்தி. திருவல்லிக்கேணி குளக்கரை அனுமாருக்குத் திருமஞ்சனம்.

புரட்டாசி 15, அக்டோபர் 1, திங்கள்   

மத்யாஷ்டமி. திருவல்லிகேணி பார்த்தசாரதி ப்பெருமாள் கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

புரட்டாசி 16, அக்டோபர் 2, செவ்வாய்  

நவமி. லக்ஷ்மி பூஜை. அவிதவாநவமி. ஸ்ரீபெரும்புதூர் மணவாளமாமுனிகள் உடையவருடன் புறப்பாடு.

புரட்டாசி 17, அக்டோபர் 3, புதன்  

தசமி. திருவல்லிகேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் நரசிம்மமூலவருக்குத் திருமஞ்சன சேவை.

புரட்டாசி 18, அக்டோபர் 4, வியாழன்  

ஏகாதசி. குருப்பெயர்ச்சி(துலா ராசியிலிருது விருச்சிக ராசிக்குப் பிரவேசிக்கிறார்), தாமிரபரணி மஹாபுஷ்கரம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருமெய்யம் சத்யமூர்த்திப்பெருமாள் புறப்பாடு.

புரட்டாசி 19, அக்டோபர் 5, வெள்ளி

ஸர்வ ஏகாதசி, துவாதசி. ராமலிங்க வள்ளலார் அவதார தினம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

புரட்டாசி 20, அக்டோபர் 6, சனி  

திரயோதசி.மருதாநல்லூர் கோவிந்தபுரம் ஆராதனை விழா. சாந்தவெளி ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு விசேஷ திருமஞ்சனம். திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோயிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

புரட்டாசி 21, அக்டோபர் 7, ஞாயிறு  

சதுர்த்தசி. கேதார கெளரி விரத பூர்த்தி, சென்னை சைதை காரணீஸ்வரர் திருக்கோயில் பஞ்ச முகார்ச்சனை. மாத சிவராத்திரி. அருணந்தி சிவாச்சாரியார். திருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சநேயருக்கு விசேஷ திருமஞ்சனம்.

புரட்டாசி 22, அக்டோபர் 8, திங்கள்  

சர்வ மஹாளய அமாவாசை. அமாசோமவாரம். அஸ்வத்த பிரதட்சிணம். ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.

புரட்டாசி 23, அக்டோபர் 9, செவ்வாய்   

பிரதமை. நவராத்திரி பூஜாரம்பம். திருவம்பல், பாபநாசம், குற்றாலம் தலங்களில் உற்சவாரம்பம்.

புரட்டாசி 24, அக்டோபர் 10, புதன்  

துவிதியை. ஸ்ரீரங்கம், திருமலை நவராத்திரி உத்ஸவாரம்பம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் லட்சார்ச்சனை. சந்திர தரிசனம். தனவிருத்தி கெளரி விரதம்.

புரட்டாசி 25, அக்டோபர் 11, வியாழன்

திரிதியை.  திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

புரட்டாசி 26, அக்டோபர் 12, வெள்ளி  

சதுர்த்தி. சதுர்த்தி விரதம், துர்காகேதசோதனம். தேரழுந்தூர் ஞானாம்பந்தர், மெலட்டூர் விநாயகர் தலங்களில் உற்சவாரம்பம்.

புரட்டாசி 27, அக்டோபர் 13, சனி  

பஞ்சமி. துர்கா ஸ்வாயனம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

புரட்டாசி 28, அக்டோபர் 14, ஞாயிறு  

சஷ்டி. திருமலை நவராத்திரி கருட சேவை, ஆதிவன் சடகோப யதீந்திர மஹாதேசிகன்.

புரட்டாசி 29, அக்டோபர் 15, திங்கள்  

சப்தமி. திருவஹிந்திரபுரம் ஸ்ரீமணவாள மாமுனிகள் திருவீதி புறப்பாடு. சரஸ்வதி ஆவாஹனம்.தாமிரபரணி மகாபுஷ்கர பூர்த்தி. திருக்கோஷ்டியூர் ஸெளம்ய நாராயணப்பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.

புரட்டாசி 30, அக்டோபர் 16, செவ்வாய்  

துர்க்காஷ்டமி. ஸ்ரீரங்கம் தாயார் திருவடி சேவை. திருக்குற்றாலம் சிவபெருமான் பவனி. குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்காரக் காட்சி.

புரட்டாசி 31, அக்டோபர் 17, புதன்  

நவமி. திருமலை ரதம், திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி மூலஸ்தான மகா அபிஷேகம். ஏனாதி நாயனார் குருபூஜை. சகல ஆலயங்களிலும் மகாநவமி பூர்த்தி. பாபநாசம் சிவபெருமான் பவனி. மதுரை மீனாட்சி பொது தர்பார் காட்சி.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com