பைரவருக்கு உகந்த வழிபாட்டு குறிப்புகள்

பைரவரை வழிபட வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாகக் கருதப்பட்டாலும், கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்கள் அதிக விசேஷமானவையாகக் கருதப்படுகின்றன.

சந்தன காப்பு அபிஷேகம்

பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக்காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரசம் அபிஷேகமும் மிக விசேஷம்.

எப்போது வழிபட வேண்டும்?

பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும். பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் மரணமில்லாப்பெருவாழ்வும் கூடகிட்டும்.

பைரவ தீபம்


பைரவப் பெருமானுக்கு சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாகக்கட்டி நல்லெண்ணெய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றிவழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப்பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.

பிடித்த மாலைகள்

பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வமாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலைஅணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களைக்கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.

பிடித்த உணவுப்பொருட்கள்

பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயசம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com