ஆனால் வளர, வளர அவர்கள் வாழும் சூழ்நிலை மற்றும் அவர்களுக்கு ஏற்படும் சகவாசத்தினால் அவர்களிடம் பல தீய குணங்கள் ஏற்படுகின்றது. சிலர் தீய காரியங்களிலும் ஈடுபடுகின்றனர். வேறு சிலர் எதிலும் சமநிலையில் இருக்க முடியாமல் தடுமாறுகின்றனர். யோக நெறிப்படி மனிதன் வாழும் முறைகளை உலகிற்கு தந்தவர் “ஸ்ரீ கிருஷ்ணர்” அவரை போற்றும் இந்த கிருஷ்ணர் அஷ்டகம் படிப்பது சிறந்ததாகும். கிருஷ்ணர் அஷ்டகம் வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் | தேவகீ பரமானன்தம் க்றுஷ்ணம் வன்தே ஜகத்குரும் – அதஸீ புஷ்ப ஸங்காஶம் ஹார னூபுர சோபிதம் | ரத்ன கங்கண கேயூரம் க்றுஷ்ணம் வன்தே ஜகத்குரும் || குடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசம்த்ர னிபானனம் | விலஸத் கும்டலதரம் க்றுஷ்ணம் வன்தே ஜகத்குரம் || மம்தார கம்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்புஜம் | பர்ஹி பிம்சாவ சூடாங்கம் க்றுஷ்ணம் வன்தே ஜகத்குரும் || உத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் | யாதவானாம் சிரோத்னம் க்றுஷ்ணம் வன்தே ஜகத்குரும் || ருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுசோபிதம் | அவாப்த துலஸீ கம்தம் க்றுஷ்ணம் வன்தே ஜகத்குரும் || கோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் | ஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் க்றுஷ்ணம் வன்தே ஜகத்குரும் || ஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் | சங்கசக்ர தரம் தேவம் க்றுஷ்ணம் வன்தே ஜகத்குரும் || க்றுஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் | கோடிஜன்ம க்றுதம் பாபம் ஸ்மரணேன வினச்யதி || கூப்பிட்டவுடன் ஓடிவந்து உதவுபவர் கிருஷ்ண பரமாத்மா ஆவர். அவரின் அருமையை புகழ்ந்து இயற்றப்பட்ட இந்த அஷ்டகத்தை வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் 27 முறை மந்திர ஜெபம் செய்வது நல்லது. இந்த ஸ்தோத்திரத்தை ஜெபிப்பவர்கள் தீய எண்ணங்கள் மற்றும் செயல்களை புரிவதிலிருந்து காக்கப்படுகிறார்கள். கேடான குணங்கள் மறைந்து நல்ல குணாதிசியங்கள் தோன்றும். எந்த ஒரு விடயத்திலும் சமநிலையுடன் இருக்க முடியும் அனைத்து நன்மைகளும் ஏற்படும். வைகுண்டத்தில் வீற்றிருக்கும் “ஸ்ரீமன் நாராயணனின்” அவதாரங்களில் அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டும், மிகவும் விரும்பி வழிபடும் அவதாரமாக “கண்ணனின்” அவதாரம் இருக்கிறது. வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்வதோடில்லாமல், செயல்படுத்தி காட்டினார். குழந்தையாக, தேரோட்டியாக, நண்பனாக, மன்னனாக கருதி வழிபடப்படும் தெய்வம் கிருஷ்ண பரமாத்மா மட்டுமே. அவரை உள்ளன்போடு வணங்கும் பக்தர்களை அனைத்திலிருந்து மீட்கும் ரட்சகனாக ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விளங்குகிறார்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.