மழலைச்செல்வம் அருளும் மரக்காலீஸ்வரர்

புதுவை மடுகரை

புதுவை மாநிலம் மடுகரையில் உள்ள மரக்காலீஸ்வரர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக விளங்குகிறது. இந்த சிவன் ஸ்தலம் சுமார் 700 வருடங்களுக்கு முற்பட்டது. ஆதி காலத்தில் மடுகரை கிராமத்தில் சிவன் ஆலயம் கிடையாது. இந்த ஊரில் மணம் முடித்த சிவபக்தர் ஒருவர், மணமுடிந்த பிறகு ஊருக்கு செல்வதற்கு ஆயத்தமானார். அதற்கு முன்னர் சிவன்கோயிலுக்கு சென்று சிவனை வழிபட்டு செல்லலாம் என்று கருதி, மாமனாரிடம் சிவன் ஆலயம் இவ்வூரில் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு மாமனார் இருக்கிறது என்று கூறிவிட்டார். ஆனால் அந்த ஊரில் சிவன் ஆலயம் இல்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். பக்கத்தில் ஆற்றில் சென்று நீராடிவிட்டு வாருங்கள் என்று மாப்பிள்ளையிடம் கூறினார். பின்னர் மனைவியிடம் நடந்ததைச் சொல்லி என்ன செய்வது, மாப்பிள்ளை வந்தால் கோயில் எங்கு இருக்கிறது என்று கேட்பாரே என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.

பிறகு பக்கத்து வீட்டில் நெல்அளக்கும் மரக்காவை வாங்கிவந்து அருகில் உள்ள ஒரு மேடான பகுதியில் வைத்து, அதற்கு எண்ணை தடவி அபிஷேகம் செய்து விபூதி பூசி சந்தனம் வைத்து புஷ்பம் மற்றும் வில்வ இலைகளால் பூஜை செய்து விளக்கு ஏற்றி வைத்து விட்டார். மாப்பிள்ளை வரும்வரை காத்திருந்து, அவரிடம் சுவாமியை காண்பித்துள் ளார். அவரும் மனமுருகி சிவனை வழிபட்டவுடன் தன் மனைவியுடன் ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டார்.   மாலைநேரத்தில் பக்கத்துவீட்டு காரர், அவரது மனைவியிடம், மரக்காவை வாங்கிவருமாறு கூறியுள்ளார். மாமனார் தன் மனைவியை அழைத்து மரக்காவை எடுத்து வருமாறு கூறியுள்ளார். மனைவி சென்று மரக்காவை எடுக்க முயன்றபோது அவரால் எடுக்க முடியவில்லை என்று தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். கணவரும் முயற்சி செய்து மரக்காவை எடுக்க முடியாததால் பக்கத்து வீட்டு காரரிடம் சுவாமியாக மாறியுள்ளது என்று கூறினார்.

கோபமடைந்த பக்கத்து வீட்டுகாரர் என்னை ஏமாற்ற பார்க்கிறீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு இந்த தம்பதிகள் நீங்களே வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். அவரும் முயற்சித்து பார்த்து முடியாததால் சுவாமியாக மாறியது என அறிந்து கொண்டார். பிறகு என்னை மன்னித்து விடுங்கள், அந்த ஈசன் நம்மிடத்தில் தன் திருவிளையாடலை செய்துள்ளார். எனவே இந்த சுவாமிக்கு மரக்காலீஸ்வரர் என்று பெயர்சூட்டி வழிபடுவோம் என ஊர் மக்கள் அனைவரும் அவ்வாறு பெயரிட்டு வழிபட்டு வந்தனர். உட்புர சன்னதிகள்இந்த கோயிலில் துவார கணபதி, பால தண்டபாணி, பைரவர், சூரியன், நால்வர் சன்னதி, நர்த்தன கணபதி, தக்ஷணாமூர்த்தி, நாராயணமூர்த்தி, லிங்கோத்பவர், கஜலட்சுமி, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை, சக்தி கணபதி, வள்ளி தேசசேனா சமேத ஷண்முகர் ஆகியவை உட்புற சன்னதிகளாக உள்ளன.

தோஷ நிவர்த்தி சந்திர சூரிய கிரகண சமயங்களில் அர்த்த மண்டபத்தில் உள்ள மரகதாம்பிகை அம்மன் நுழைவு மேற்பகுதியில் உள்ள பாம்பை தரிசனம் செய்தால் தோஷ நிவர்த்தி ஏற்படுமாம். எந்த விதமான தோஷம் இருந்தாலும், கிரகண சமயங்களில் பாம்பை வழிபட்டால் தோஷநிவர்த்தி நீங்கி வாழ்க்கை சிறப்பாக அமையும். மரக்காலீஸ்வரரை வழிபட்டு வந்தால் திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும். அதேபோல் குழந்தை பாக்கியம் அருளும் தலமாகவும் இந்தக்கோயில் விளங்குகிறது.

செல்வது எப்படி?

புதுவையில் இருந்து வில்லியனூர் மற்றும் தவளக்குப்பம் வழியாக 30 கி.மீ தொலைவில் மரக்காலீஸ்வரர் கோயில் உள்ளது.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com