சோம்பிக்கிடக்கும் மனமும் உடலும் தீமைகளின் கூடாரமாகும். மனிதர்கள் அனைவரும் உழைத்தால் மட்டுமே எல்லோரும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். வாழ்க்கைக்கு தேவையான பணத்தை பெறுவதற்கு நாம் அனைவரும் ஏதாவது ஒரு பணி அல்லது தொழில் ஈடுபடுகிறோம். இந்த பணி, தொழிகளில் புதிய முயற்சிகளில் ஈடுபட இருப்பவர்கள் அஞ்சனை தேவியின் மைந்தனான ஆஞ்சேநேயரின் இந்த ஸ்லோகத்தை கூறி வழிபடுவது சிறப்பானதாகும்.
ஆஞ்சநேயர் ஸ்லோகம்
ஆஞ்சநேய மதி படலநாநம்
காஞ்சனாத்திரி காமனீய விக்ரகம்
பாரிஜாத தாரு மூல வசிநம்
பாவயாமி பவ மன நந்தனம்
வாயு பகவானின் மைந்தனான ஆஞ்சநேயரை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினந்தோறும் 27 முறை கூறி வருவது சிறந்தது. சனிக்கிழமைகளில் காலை பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதியில், நெய்விளக்கேற்றி, பழம் மற்றும் பூக்களை நிவேதனமாக வைத்து, இந்த ஸ்லோகத்தை 108 முறை கூறி வழிபட வேண்டும். இதை சனிக்கிழமைகள் தோரும் செய்து வர நீங்கள் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றிபெறும். வருமானமும் பெருகும். வானரர்களின் சிறந்த அரசானனான கேசரியின் மைந்தனானவர் ஸ்ரீ ஆஞ்சநேயர். அனைத்து தேவர்களும் அவருக்கு அளித்த வரங்களின் காரணமாக என்றும் இறவாத நிலையான “சிரஞ்சீவி” தன்மையை அடைந்தவர். ஸ்ரீராமனுக்கு பணிவு மிக்க சேவகனாகவும், அரக்கர்களையும் ராட்சதர்களையும் அழிப்பதில் வல்லவர். விடாமுயற்சிக்கும், மன உறுதிக்கும், தைரியத்திற்கும் பெயர்பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயரை இம்மந்திரம் ஜெபித்து நாம் வழிபடுவதால் நாம் வாழ்க்கைக்கு தேவைப்படும் செல்வத்தை ஈட்டுவதற்கான வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் வியாபார முயற்சிகளில் வெற்றி கிட்டும்.