மேலைத்திருக்காட்டுப்பள்ளி (திருக்காட்டுப்பள்ளி)கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: அக்னீஸ்வரர், தீயாடியப்பர்.
இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி, அழகம்மை.
தல மரம்: வன்னி, வில்வம்.
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம், காவிரி.
வழிபட்டோர்: அப்பர், சம்பந்தர்,அக்கினி, திருமால், பிரமன், சூரியன், பகீரதன், உறையூர் அரசி முதலியோர்.

 

 

தல வரலாறு

   • மக்கள் வழக்கில் திருக்காட்டுப்பள்ளி என்று வழங்குகிறது. (காவிரியின் வடகரையில் உள்ளது கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும். இஃது திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது.)

     

   • அக்கினி வழிபட்ட தலமாதலின் இக்கோயிலுக்கு ‘அக்னீஸ்வரம்’ என்று பெயர்.

   • உறையூரிலிருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில் இறைவனுக்குரியதாகப் பூத்து வந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன் பறித்து வந்து தர அவற்றைப் பெற்றுத் தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்த மனைவி அம்மலர்களைத் தான் சூடிக்கொள்ளாமல் சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள், இளைய மனைவி தான் சூடி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர் மண், மாரியால் (மழை) அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது என்று சொல்லப்படுகிறது.

 

தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	வாருமன் னும்முலை. 
				 2. அப்பர்  - மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை.

தல மரம் : வன்னி, வில்வம்

சிறப்புகள்

   • இங்குள்ள அக்கினி தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமக

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சி, தஞ்சை, திருக்கண்டியூர், திருவையாறு, கல்லணை முதலிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு பேருந்துகள் உள்ளன. திருவையாறு – கல்லணை சாலையில் இத்திருக்காட்டுப்பள்ளி உள்ளது. தொடர்பு : 09442347433.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com