ருத்ராட்சம் அணிவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ருத்ராட்சத்தை பெரியவர்களின் துணையுடன் வாங்கிய பிறகு, சுத்தமான தண்ணீரில் அல்லது எலுமிச்சைப் பழச்சாறு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
பிறகு சுத்தமான விபூதியில் ஒரு நாள் முழுவதும் போட்டு வைத்து, அடுத்த நாள் சிவாலயத்தில் உள்ள ஈஸ்வரனது பாதங்களில் வைத்து எடுத்து, குரு அல்லது பெரியோர்களின் கரங்களால் அணிந்து கொள்வது முறை.
ருத்ராட்ச மணிகள் ‘புருஷ அம்சம்’ கொண்டதாக இருப்பதால் ஆண்கள் மட்டுமே அணியலாம் என்று ஒரு கருத்து உண்டு.
‘ஜாபால உபநிஷதமானது’ – பொதுவான ‘ருத்ராட்ச தாரண விதி’ என்றுதான் குறிப்பிடுகிறது. அதனால் சிவ வழிபாடு செய்யும் அனைவரும் அணியலாம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.