தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோவில்கொண்டு இவ்வுலகையே காத்து ரட்சிக்கும் அன்னை மீனாட்சி அம்மனை வழிபடுவதன் பலனாக நாம் பல அற்புத நன்மைகளை பெற முடியும். தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். அதோடு 248 சக்தி பீடங்களில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது. அகிலத்தை காக்கும் மீனாட்சி அம்மனை வழிபடுவோருக்கு வாழ்வில் என்றும் சுபிட்சம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் மீனாட்சி அம்மனை வழிபடும் சமயத்தில் அவளுக்குரிய காயத்ரி மந்திரம் அதனை கூறுவது நமக்கு சிறப்பு சேர்க்கும்.
மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம்
ஓம் உந்நித்ரியை வித்மஹே
ஸுந்தப ப்ரியாயை தீமஹி
தந்நோ மீனாதேவீ ப்ரசோதயாத் –
– செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பலனாக பெண்களுக்கு அழகு கூடும், அற்புதமான கணவன் அமைவார், வீட்டில் சுபிட்சம் பெருகும், மன நிம்மதி அதிகரிக்கும்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.