வீடுகளில் விளக்கேற்றும் போது பாட வேண்டிய பாடல்

திருவிளக்கினை லட்சுமியின் அம்சமாகக் கருதுவது நமது இயல்பாகும். அருளது சக்தியாகும் அரன் தனக்கு இறைவருடைய அருளே சக்தி எனப்போற்றப்படுகிறது. அத்தகைய இறையருளை இறைவியை தீபத்தில் அமரச்செய்து நலம் பெறுதல் பொருட்டே வீடுகளில் காலையும் மாலையும் விளக்கேற்றப்படுகிறது. ”ஆவாஹனம்” என்னும் சொல்லுக்கு ”அழைத்தல்” என்று பொருள். எங்கும் நிறைந்திருக்கும் இறையருளை- சக்தியை நாம் ஏற்றும் தீபத்தில் அமர்ந்து அருள்புரியும்படி செய்ய வேண்டும்.

கீழே காணும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடலைப்பாடியவாறே தீபத்தை ஏற்ற வேண்டும். இப்பாடலை அருளியவர் குமரகுருபர் சுவாமிகள் ஆவர். இவர் மதுரையில் அரங்கேற்றம் செய்யும்போது மீனாட்சியம்மையே இப்பாடலுக்கு மகிழ்ந்து, குழந்தையாக வந்து முத்துமாலையை அருளி மறைந்தாள் என்பது உண்மை வரலாறு ஆகும்.

Image result for விளக்கேற்றும்

பெருந்தே னிறைக்கும் நறைக் கூந்தற்
பிடியே வரு முழுஞானப்
பெருக்கே வருக பிறை மௌலிப்
பெம்மான் முக்கட் சுடர்க்கிடுதநல்
விருந்தே வருக மும்முதற்கும்
வித்தே வருக வித்தின்றி
விளைந்த பரமா னந்தத்தின்
விளைவே வருக பழமரையின்
குருந்தே வருக அருள் பழுத்த
கொம்பே வருக திருக்கடைக்கண்
கொழித்த கருணைப் பெருவெள்ளம்
குடைவார் பிறவிப் பெரும்பிணிக்கோர்
மருந்தே வருக பசுங்குதலை
மழலைக்கிளியே வருகவே
மலையத்துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே.

இப்பாடலை பாடிய வண்ணம் விளக்கை ஏற்றினால் இறையருள் ஒளியில் விளங்கியிருப்பாள்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com